இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

Published on Author தண்பொழிலன்

“தந்தை செல்வா பற்றிய நூல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, எதேச்சையாக நூலகமொன்றில், அவர் காலத்து விவரங்கள்  விரிவாகப் பதிவாகியுள்ள சுதந்திரன், ஈழநாடு ஆகிய நாளிதழ்களைக் கண்டெடுத்தோம். இப்போது நாம் செய்கின்ற ஆவணப்படுத்தல் முக்கியமானது தான் என்றாலும், கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக இந்த ஆவணப்படுத்தலை விடாமல் செய்துவந்தோரின் முயற்சியில் தான் மேற்படி இதழ்கள் எமக்குக் கிடைத்தன என்பதைக் குறிப்பிடவிரும்புகிறேன்” என்று தெரிவித்தார் திரு.கோபிநாத். அவுஸ்திரேலியாவின் ஏரிபிசி (ATBC) வானொலிக்கு அவர் நூலகம் நிறுவனம் தொடர்பாக வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு… Continue reading இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

நூலக நிறுவன வளங்கள் உயர் ஆய்வுக்கு பயன்படுத்த வல்லவை!

Published on Author தண்பொழிலன்

நூலகம் அருமையான, அரிய படைப்புக்களை பாதுகாத்து அணுக்கம் வழங்குகின்றது. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில், நூலக நிறுவனத்தின் வலைத்தளங்களிலுள்ள நூல்களையும் இதர சேகரங்களையும் மட்டுமே அணுகித் தம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதனூடாக பலரும் தம் முனைவர்ப் பட்டங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். திரு.அருண்மொழிவர்மன் மற்றும்  திரு.சுகந்தன் ஆகியோர் கனடாவின் சி.எம்.ஆர். வானொலிக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வழங்கிய செவ்வியில் மேற்படி தெரிவித்தனர். நூலகம் நிறுவனம், அது உருவான பின்னணி, அதன் துணைத்திட்ட வலைத்தளங்களான நூலகம் , ஆவணகம்,… Continue reading நூலக நிறுவன வளங்கள் உயர் ஆய்வுக்கு பயன்படுத்த வல்லவை!