நூலகத்தில் திருகோணமலை மண்ணின் – “மலைமுரசு”

Published on Author Loashini Thiruchendooran

திருகோணமலையிலிருந்து வாராந்தம் வெளிவந்த ‘மலைமுரசு’ பத்திரிகையின் இதழ்களை இப்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும்.

image1இப் பத்திரிகை வார இதழாக 29.07.2012 வெளிவர ஆரம்பித்தது. 22.04.2016 வரை வெளிவந்த இப்பத்திரிகையின் 180 இதழ்களும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு நூலக வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 

திருகோணமலை சார்ந்த செய்திகள், ஆக்கங்கள், கட்டுரைகள், ஆய்வுகள் மற்றும் கலாசார விடயங்கள் என பல்வகைத்தன்மை கொண்ட விடயங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ்விதழ்கள் வெளிவந்துள்ளன.image2

 

இக்காத்திரமான பத்திரிகையின் உரிமையாளரும், பிரதம ஆசிரியருமான கலாநிதி ஶ்ரீஞானேஸ்வரன் (கண்ணன்) அவர்கள், இப்பத்திரிகையினை எதிர்காலச் சந்ததிக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாட்டிற்காக வழங்கியிருந்தார்.

இதனை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி உலகம் பூராகவும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மலைமுரசு பத்திரிகைத் தொகுப்பினை பார்வையிட – http://tinyurl.com/4mvtk99n

உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களிடமுள்ள ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

www.noolaham.org | www.noolaham.school | www.noolaham.media | www.noolaham.tech
நூலக நிறுவனம்

இல: 55

சோமசுந்தரம் ஒழுங்கை

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், இலங்கை.

+94 21 223 1292 | +94 77 898 3285 

noolahamfoundation@gmail.com www.noolaham.foundation