வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் Yarl IT Hub மற்றும் யாழ்பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய FiTEN Yarl 2024 மாநாடு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, இலங்கைக்கு வந்திருந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்க கூட்டமைப்பு (Federation of Tamil Sangams of North America – FeTNA) உறுப்பினர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான திரு. சசீவன் கணேசானந்தன் அவர்களும் 19 ஜனவரி 2024, வெள்ளிக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இவர்கள் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகள், நூலக நிறுவனத்தின் பெளதீக ஆவணங்கள் (Physical Repository), நூலக நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான பத்திரிகைகள், நூல்கள் போன்றவற்றையும் பார்வையிட்டனர். மேலும் நூலகச் செயற்பாடுகள் தொடர்பிலான விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இவர்களுடனான சந்திப்பில், நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலகர் திருமதி. றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களும், எண்ணிமப் பாதுகாப்புச் செயன்முறைப் பணியாளர்கள், எண்ணிம நூலக ஆவணகத்துறைப் பணியாளர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர். இறுதியாக, குழுவினர் புகைப்படம் எடுக்கப்பட்டு, பிற்பகல் 4.30 மணியளவில் இவர்களுடனான சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.