நூலக நிறுவனத்தின் Digital Library & Archive (Information Architecture) இன் Process Mentor திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

18.09.2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாகப் பங்களித்து வரும் ஈழத்து நூலகவியலாளரான  திரு. நடராஜா செல்வராஜா அவர்கள் வருகை தந்திருந்தார். 

a (2)நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏற்கனவே நன்கறிந்த இவர், “எண்ணிம நூலக மற்றும் ஆவணகம் துறை” சார்ந்த அனைத்து முன்னெடுப்புகளிலும் பங்களித்து வருகிறார். ஆவணங்களுக்கான அனுமதி பெறல், அரிய ஆவணங்களின் ஆவணமாக்கம், நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இதழ்கள், சஞ்சிகைகள் பற்றிய தெளிவுப்படுத்தல் என பல வகைகளில் வழிகாட்டி வருவதுடன், வட இலங்கையின் மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் செயற்றிட்டத்தின் வலைவாசல் உருவாக்கத்திற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார். 

2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நூலகத்திற்கு நிதி சார்ந்து பங்களித்துள்ளதுடன், இவரது 72 ஆவணங்கள் “செல்வராஜா, என்.” பகுப்பில் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

யாழ் பல்கலைக்கழக நூலக எண்ணிமமாக்கம், கிழக்கிலங்கையின் ஓலைச்சுவடிகளினை ஆவணப்படுத்தல்,  சார்ந்து சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். அத்துடன் இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றான “கன்னிமாரா பொது நூலகத்தில்” காணப்படக்கூடிய “தமிழர் தகவல்” (Tamils’ Information) என்ற மாதாந்த தகவல் மஞ்சரி இதழ்களை நூலகத்தில் ஆவணப்படுத்தும் படியும், இலங்கையின் “கொக்குவில் பொதுசன நூலகத்தில்” காணப்படக்கூடிய அரிய ஆவணங்களையும், ஆரம்பகால பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட ஆவணங்களைத் தேடி நூலகத்தில் ஆவணப்படுத்தும் படியும் தெரிவித்திருந்ததுடன், நூலகத்திற்கென “Accession Ledger” ஒன்றினை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கூறியிருந்தார்.

b

c

 

இவருடனான சந்திப்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.

d (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *