நூலக நிறுவனத்தின் “முன்னோர் ஆவணகம்” செயற்றிட்டத்தின் வழிகாட்டியாக செயற்படும் திரு. சரவணன் நடராசா அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

2024, ஒக்டோபர் மாதம் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, நோர்வே இலிருந்து நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாகப் பங்களித்து வரும் திரு. நடராசா சரவணன் அவர்கள் வருகை தந்திருந்தார். 

நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏற்கனவே நன்கறிந்த இவர், முன்னோர் ஆவணகம் மற்றும் ஈவ்லின் ரத்தினம் செயற்றிட்டங்களின் முன்னெடுப்பிற்கு தொடர்ச்சியாக ஆலோசனைகள் வழங்கி வருகின்றார். அதுமட்டுமன்றி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் Grey Board Member ஆகவும் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோர்வேயினைக் களமாகக் கொண்டு 2001 இல் வெளிவர ஆரம்பித்த இவரது “பறை” இதழின் தொகுப்பு மற்றும் “பகுப்பு:சரவணன், என்.” இல் நூலகத்தில் அறிந்தவர்களும் அறியாதவைகளும், IMG_7598 (1)இலங்கை: அரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும், தவேந்தல்: குகதாசன் தவேந்திரன் ஆகிய ஆவணங்களும் ஆவணப்படுத்தப்பட்டிருகின்றன.

நூலகத்தின் செயற்பாடுகள் மற்றும் அரிய ஆவண காட்சிப்படுத்தல் என்பவற்றை நேரடியாகப் பார்வையிட்ட இவர், நூலகப் பணியாளர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிகளையும் வழங்கி இருந்தார். இதுவரை ஒன்லைன் மூலமாக நூலக செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட இவரது நேரடியான பயிற்சியானது, அனைத்து பணியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

IMG_7600 (1)குறிப்பாக, ஆவணங்களின் தரத்தை பேணுதல், ஆய்வுத்தேவைக்காக பயன்படுத்தக்கூடிய சில இலகுவான முறைகள், ஒன்லைன் மூலமாக ஆவணங்களை தரவிறக்கம் செய்தல், ஒன்லைன் இல் நூல்களை உருவாக்கம் செய்தல், வடிவமைத்தல், மிக நுணுக்கமான எண்ணிமமாக்கத்திற்கு பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள், ஆவணங்களின் சாராம்சத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் என நூலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில வேலைகளை இலகுபடுத்துவதற்கான முறைமைகள் தொடர்பில் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

மேலும், இவருடனான சந்திப்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.IMG_7627 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *