மட்டக்களப்பில் இருந்து ஓர் ஆய்விதழாக வெளிவரும் ‘மொழிதல்’ இதழ்களினை இப்போது நூலகம் நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும்.
இவ் ஆய்விதழ் அரையாண்டிதழாக 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான சி.சந்திரசேகரம், வ.இன்பமோகன், சு.சிவரத்தினம் முதலியோர் இவ் இதழ்களினது ஆசிரியர்களாக உள்ளனர். மேலும் பல முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் இவ் இதழின் ஆலோசகர்வட்டத்தில் பங்கெடுக்கின்றனர்.
பல்வேறு புலமையாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ் ஆய்விதழ் வெளியாகின்றது. இதனை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி உலகம் பூராகவும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை இவ் இதழின் ஆசிரியர்களுள் ஒருவரான கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் சி.சந்திரசேகரம் அவர்கள் நூலக நிறுவனத்திடம் கையளித்தார்.
இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/q9j2h4o
{{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது உறவினர்களுடைய நினைவுமலர்களையும் நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்குத் தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292, noolahamfoundation@gmail.com}}