சாந்திகம் அலுவலகர்களுடன் சந்திப்பு

Published on Author Noolaham Foundation

உளநல ஆலோசனைகள், பயிற்சிகள், உளவள கற்கை நெறிகள் தொடர்பில் பல உளவள வைத்திய நிபூணர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்டகாலமாக சேவையாற்றிவரும் சாந்திகம் நிலையத்தில் (Shanthiham-Association for health and Counselling) அந் நிறுவன இயக்குணர் ஜே.தற்பனன் மற்றும் நிறுவன அலுவலர்கள், மூத்த உளவள வைத்திய நிபூணர் வைத்திய கலாநிதி.தயா சோமசுந்தரம் முதலியோருடன் 05/12/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகர் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பில் ஓர் சிறு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

Front side

DSCN3516

DSCN3517

DSCN3518

இதன் இறுதியில் மூத்த உள்வள வைத்திய நிபூணர் மற்றும் சமூகநல செயற்பாட்டாளர் வைத்திய கலாநிதி. தயா சோமசுந்தரம் அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை வழங்கியதுடன்,

சாந்திகம் நிலைய வெளியீடுகளை முழுமையாக நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும் ஜே.தற்பனன் அவர்கள் வழங்கியிருந்தார். அத்துடன் நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுடன் இணைந்து தம்மாலான பங்களிப்பினையும் வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இணைப்பில் நூல்கள்-
தயா சோமசுந்தரம்- http://tinyurl.com/Daya-Somasundaram
சாந்திகம்- http://tinyurl.com/Shanthiham

விரைவில் சாந்திகம் நிலைய வெளியீடுகள் முழுமையாக எண்ணிம ஆவணப்படுத்தப்பட்டு நூலக நிறுவன எண்ணிம நூலகத்தினூடாக உலகளாவிய ரீதியில் திறந்த அணுக்கத்தில் பகிரப்படும்.

DSCN3519

DSCN3520

{{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும், அரிய பல ஆவணங்களினை எண்ணிமமாக்கி பாதுகாத்து அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292, noolahamfoundation@gmail.com}}