நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 11.06.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான வானொலி – திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர்  என பல பெருமைக்குரிய கலைஞர் ஆனந்தராணி, பாலேந்திரா அவர்கள்  கடந்த 11.06.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

image5 image9

இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் Sri Lankan Airlines விமானங்களில் முதன் முதலாக பல வருடங்கள் ஒலித்த தமிழ் அறிவிப்புக் குரலுக்கு சொந்தக்காரியான இவர், நூலகத்தின் ஒலிநூல் செயற்றிட்டத்திற்கு ஆரம்பம் முதல் இன்றுவரையில் தன்னார்வலராக பங்காற்றி வருகின்றார். 

image14

நூலக நிறுவனம் சார்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலகர் றஞ்சுதமலர் நந்தகுமார், எண்ணிமப் பாதுகாப்பு மற்றும் செயன்முறைக் குழு, எண்ணிம நூலக மற்றும் ஆவணகத்துறைக் குழு மற்றும் ஏனைய நூலகப் பணியாளர்களும் இச்சந்திப்பில் பங்கு கொண்டனர்.