எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாகப் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா ஆவணி மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டு (06/08/2023) பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றது.
வென்மேரி அறக்கட்டளையின் மதிப்புமிக்க நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட, இவ் ஆண்டிற்கான சாதனையாளர்களை அறிமுகம் செய்வதில் வென்மேரி அறக்கட்டளை ஆவணப்படுத்தல் பணிகளை செம்மையாக செய்து வருவதற்காக நூலக நிறுவனத்தினை ஆவணப்படுத்தலுக்கான சிறந்த நிறுவனமாக தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் அருட்தந்தை திமோதி எம்.எப் லோங் ஞாபகார்த்த விருதினை நூலக நிறுவனம் சார்பில் பிரித்தானியாவின் நூலக நிறுவன அக்கத்தவர்களுள் ஒருவரான பவகரன் வன்னியசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.