ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாதுகாக்கப்பட்டுவந்த ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு 24.06.2020. புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட கலாசாரகூடத்தில் காலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றுச் சாதனங்கள், ஏடுகள் மற்றும் பண்டைய தொன்மை கூறும் ஆவணங்கள் மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்விதம் ஆவணம் செய்யப்பட்ட பிரதிகளை ( 28 ) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது நூலக நிறுவனத்தின் ஆளுகை சபை உறுப்பினர் சொக்கலிங்கம் பிரசாத் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் கையளித்தார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், மேலதிக அரசாங்க அதிபர் காணிப்பிரிவு நவரூப ரஞ்சினி முகுந்தன், உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஜெய்னுலாப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Image may contain: 4 people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting, people eating, table and indoor