08.05.2024, புதன்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு, யாழ்ப்பாணம் கோண்டாவிலில் இருந்து நூலக நலன்விரும்பிகளுள் ஒருவரான ராஜன் பாலா வருகை தந்திருந்தார்.
கடந்த 26 பெப்ரவரி 2024, திங்கட்கிழமை அன்று வருகை தந்திருந்த போது நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் அடைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதற்கமைவாக,
- நூலக நிறுவனத்தின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு முகாமைத்துவம்
- ஐக்கிய அமெரிக்காவிற்கான நூலக செப்டர் பதிவு
- நூலக செயற்பாடுகளுக்கான நிதி பங்களிப்பு ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக மீண்டும் வருகை தந்திருந்தார்.
குறிப்பாக நிறுவனத்தின் Backup முறைமைகள், Cloud Storage, Hardware & software maintenance சார்ந்து சில கருத்துக்களையும் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு துறை சார்ந்து நிறுவனத்திற்கான அலுவலர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் காணப்படக்கூடிய சிக்கல்களையும் அதற்கான மாற்று வழிமுறைகளையும் முன்வைத்திருந்தார்.
இவருடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன், நூலகப் பிரதம நிறைவேற்று அலுவலகர், மற்றும் நூலகப் பணியாளர்களும் பங்கு கொண்டனர்.