14 மே 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு நோர்வேயிலிருந்து க. நிர்மலநாதன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி நிர்மலன் ஆகியோர் வருகைத் தந்திருந்தனர்.
இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர்.
மேலும் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதில், நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியைப் பாராட்டியதுடன், தென்மராட்சி ஆவணப்படுத்தல் பற்றிய புதியதொரு செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பது பற்றியும், அதற்கான பங்களிப்பை வழங்குவதாயும் குறிப்பிட்டிருந்தனர். இச்செயற்றிட்டம் தொடர்பில் உருவாக்கப்பட்ட முன்மொழிவும் இவர்களுடன் பகிரப்பட்டு கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இச்செயற்றிட்டத்தை கூடியவிரைவில் ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களை முன்னெடுக்கும் படியும் குறிப்பிட்டு இருந்தனர்.
கலைச்செல்வி நிர்மலன் அவர்கள் பெண்கள் சார் விழிப்புணர்வு தொடர்பில் அதிக ஆர்வமுள்ளதாகவும், அது சார்ந்த செயற்பாடுகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டதுடன் நூலகத்தின் பெண்கள் ஆவணகம் செயற்றிட்டம் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். மேலும், ஆவணமாக்கம் சார்ந்து தனது சேகரிப்பிலுள்ள சில ஆவணங்களை எண்ணிமப்படுத்துவதற்காக நூலகத்திற்கு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இவர்களுடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.