நூலக செயற்றிட்ட பங்களிப்பாளர்: “மனித நேயம் அறக்கட்டளை”

Published on Author Loashini Thiruchendooran

எதிர்கால சந்ததியினரை அமைதி, வாய்ப்பு மற்றும் மகிழ்ச்சியின் உலகத்தை நோக்கி வழிநடத்தக்கூடிய வகையில் மனிதகுலத்தின் மீதான உலகளாவிய ஆர்வத்தையும் அன்பையும் பற்றவைப்பதை தூர நோக்காகக் கொண்ட மனித நேயம் அறக்கட்டளையின் ஆதரவிற்கு நூலக நிறுவனத்தின் நன்றிகள்.

image1குறிப்பாக “தேவைப்படுபவர்களுக்கு தொண்டு மற்றும் சமூக சேவைகளை வழங்குதல்” என்ற தன்னுடைய குறிக்கோளின் கீழ் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு பங்களித்து வருகிறது.

யாழ்ப்பாணப் பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டமும் மனித நேயம் அறக்கட்டளையும்:

பல்வேறு விதமான செயற்றிட்டங்களுக்கூடாக ஈழத்துத் தமிழ் பேசும்   சமூகங்களினுடைய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்ற நூலக நிறுவனம், யாழ்ப்பாணம் பொது நூலகத்துடன் இணைந்து நூலக நிறுவனத்தினால் இதுவரை ஆவணப்படுத்தப்படாத பொதுநூலகத்திலுள்ள ஆவணங்களை, அனைவரும் பயனடையும் வகையில் ஆவணப்படுத்தி அவற்றை நீண்ட காலம் பாதுகாப்பதனை மையமாகக் கொண்டு, “யாழ்ப்பாணப் பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டம்” இனை 2022ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுச் செயற்றிட்டமாக ஆரம்பித்தது. மனித நேயம் அறக்கட்டளை (Manitha Neyam Trust) அனுசரணையுடன் முன்னெடுத்து வருகின்ற இச்செயற்றிட்டத்திற்குப், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் படிக்கவும் பரப்பவும் உதவுவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் மகத்தான பயன் தரும் என்ற நோக்கில் பங்களித்து வருகின்றனர்.

உலகளவில் கல்வி மற்றும் தொழில்துறைக்கு ஆலோசகராக விளங்கும் பேராசிரியர் ஸ்ரீஹரன் இச்செயற்றிட்டத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களுள் ஒருவராவதுடன் இவரே இச்செயற்றிட்டத்தில் மனித நேயம் அமைப்பினை நூலக நிறுவனத்துடன் ஒருங்கிணைக்க உதவியவர். 

அதேபோன்று மனித நேயம் அமைப்பின் உறுப்பினரான திரு. மித்திரன் அவர்களும் இச்செயற்றிட்டத்தின் மற்றுமொரு பங்களிப்பாளராகத் திகழ்கின்றார். இவர் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் பாகமான இச்செயற்றிட்டத்தின் அடைவுகள் மற்றும் அதனது இறுதி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், மனித நேயம் அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்போகும் ஆவண அறிக்கையிடலுக்குத் தேவையான விடயங்கள்சார்ந்து கலந்தாலோசிப்பதற்கும் நூலக நிறுவனத்திற்கு நேரடியாக வருகை தந்ததுடன், செயற்றிட்டத்தின் இரண்டாம் பாகம் 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னின்று செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக இச்செயற்றிட்டத்தின் ஆரம்பம் முதல் அனுசரண வழங்கி வருகின்ற இவ் அறக்கட்டளையின் பங்களிப்பு, 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டத்தின் இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமெரிக்க நூலக பங்களிப்பும் மனித நேயம் அறக்கட்டளையும்:

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து உதவி செய்து வருவதை முக்கிய நோக்கமாகக் கொண்ட இச் சமூக அறக்கட்டளை, நூலக நிறுவனத்துடன் 2016ஆம் ஆண்டிலிருந்து இணைந்து பயணிக்கிறது. பிரித்தானியா, கனடா, நோர்வே, ஐக்கிய அமெரிக்கா என பல நாடுகளில் செப்டர்களை கொண்டிருக்கக்கூடிய நூலக நிறுவனம் அந்தந்த நாடுகளின் பங்களிப்புகளை பெற்றுக்கொள்வதற்கான வங்கி கணக்கினை அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ளது. எனினும் ஐக்கிய அமெரிக்காவில் மாத்திரம் இதுவரையில் கணக்கொன்று இல்லாத நிலையில் அந்நாட்டு பங்களிப்பாளர்களின் நிதி உதவியினை இவ் அறக்கட்டளையின் கணக்கிலக்கம் ஊடாகவே இன்றுவரை நூலக நிறுவனம் பெற்று வருகின்றது. 

United States of America

Account Name Manitha Neyam Trust
Via Bill Pay Manitha Neyam Trust

97, Charter Road,

Acton, MA 01720

Phone: +19782640478

Email: ustrust@manithaneyam.org

Add Memo: “Noolaham”

PayPal https://tinyurl.com/nf-uk-paypal 
Contact Piratheepan Paramananthan

(+13236794666)

மனித நேயம் அறக்கட்டளையின் கணக்கின் பெயரிலேயே அமெரிக்க நன்கொடை நூலக நிறுவனத்தை அடைவதுடன், இதுவரை எவ்வித மறுப்பும் இன்றி எங்களுக்கு உதவியினை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிறுவன செயற்பாடுகளுக்கான பங்களிப்பில் மனித நேயம் அறக்கட்டளை:

நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள் அனைத்தும் நன்கொடைகளின் ஊடாகவே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. குறிபாக உலக நாடுகளில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களையும் ஆயிரக்கணக்கான நிதிக்கொடையாளர்களையும் கொண்டு செயற்பட்டு வருகின்ற இந்நிறுவனத்தின் செயல்பாட்டு செயன்முறைகளுக்காக 2019ஆம் ஆண்டு ஒரு தொகை பணத்தினை மனிதநேயம் அறக்கட்டளை வழங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக நூலக நிறுவனத்தினது செயற்றிட்டம், நிதிப்பங்களிப்பு என அனைத்து செயற்பாடுகளிலும் ஆதரவளித்து வருகின்ற மனித நேயம் அறக்கட்டளைக்கு நூலக நிறுவனம் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தங்களது தொடர்ச்சியான ஆதரவையும் எதிர்பார்த்து இருக்கின்றது.

www.noolaham.foundation

 

info@noolahamfoundation.org

noolahamfoundation@gmail.com

 

0094 21 223 1292 | 0094 77 898 3285