நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாண பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டம்

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

நூலக நிறுவனம் பல்வேறு விதமான செயற்றிட்டங்களுக்கூடாக ஈழத்துத் தமிழ் பேசும்   சமூகங்களினுடைய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. அவற்றுள் யாழ்ப்பாணம் பொது நூலகத்துடன் இணைந்து நூலக நிறுவனத்திimage7னால் இதுவரை ஆவணப்படுத்தப்படாத பொதுநூலகத்திலுள்ள ஆவணங்களை, அனைவரும் பயனடையும் வகையில் ஆவணப்படுத்தி அவற்றை நீண்ட காலம் பாதுகாப்பதனை மையமாகக் கொண்டு, “யாழ்ப்பாணப் பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டம்” இனை 2022ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுச் செயற்றிட்டமாக ஆரம்பித்தது.

 

நோக்கம்:

“பொதுசன நூலகத்திலுள்ள பத்திரிகைகள், சஞ்சிகைகள் உள்ளடங்களாக அங்குள்ள எண்ணிமப்படுத்தப்படாத ஆவணங்களை அடையாளப்படுத்திப் பட்டியலிட்டு அவற்றை எண்ணிமப்படுத்தல் மூலம் இணையவழியில் திறந்த அணுக்கத்திற்குப் பதிவேற்றம் செய்தல்.”

அனுசரணை:

நூலக நிறுவனமானது யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தை முக்கியப் பங்குதாரர்களாகக் கொண்டு இச்செயற்றிட்டத்தினை, மனித நேயம் அறக்கட்டளை (Manitha image1Neyam Trust) அனுசரணையுடன் முன்னெடுத்து வந்தது. ஆவணங்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் பிற தொடர்புடைய வெளியீடுகளின் எண்ணிமமயமாக்கும் இத்திட்டத்தைப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் படிக்கவும் பரப்பவும் உதவுவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் மகத்தான பயன் தரும் என்ற நோக்கில் இச்செயற்றிட்டத்திற்குப் பங்களித்து வருகின்றனர்.

குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து உதவி செய்து வருவதை முக்கிய நோக்கமாகக் கொண்ட இச் சமூக அறக்கட்டளை நூலக நிறுவனத்துடன் 2016ஆம் ஆண்டிலிருந்து இணைந்து பயணிக்கிறது. நூலக நிறுவனத்திற்கான அமெரிக்க நாட்டு பங்களிப்பாளர்களின் நிதி உதவியினை இவ் அறக்கட்டளையின் கணக்கிலக்கம் ஊடாகவே இன்றுவரை நூலக நிறுவனம் பெற்று வருகின்றது. மேலும் 2019ஆம் ஆண்டு நிறுவனத்தின் செயல்பாட்டு செயன்முறைகளுக்காக ஒரு தொகை பணத்தினை வழங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்றிட்டத்தில் பேராசிரியர் ஸ்ரீஹரன் மற்றும் திரு. மித்திரன் ஆகியோரின் பங்கு:

image6குறிப்பாக உலகளவில் கல்வி மற்றும் தொழில்துறைக்கு ஆலோசகராக விளங்கும் பேராசிரியர் ஸ்ரீஹரன் இச்செயற்றிட்டத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இச்செயற்றிட்டத்தில் மனித நேயம் அமைப்பினை நூலக நிறுவனத்துடன் ஒருங்கிணைக்க உதவியவர் இவரே. மேலும் “வட இலங்கையின் மருத்துவ வரலாறு” தொடர்பிலான நூலகத்தின் மற்றுமொரு செயற்றிட்டத்திற்கும் இவர் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2023 பெப்ரவரி 27ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் திருநாவுக்கரசு குமணன் அவர்களுடன் நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்த இவர், நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் செயற்றிட்டங்கள் சார்ந்த பங்களிப்புக்கும் முன்வந்தமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

image4மேலும் மனித நேயம் அமைப்பின் உறுப்பினரான திரு. மித்திரன் அவர்களும் இச்செயற்றிட்டத்தின் மற்றுமொரு பங்களிப்பாளராகத் திகழ்கின்றார். குறிப்பாக 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் பாகமான இச்செயற்றிட்டத்தின் அடைவுகள் மற்றும் அதனது இறுதி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், மனித நேயம் அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்போகும் ஆவண அறிக்கையிடலுக்குத் தேவையான விடயங்கள்சார்ந்து கலந்தாலோசிப்பதற்கும் நூலக நிறுவனத்திற்கு நேரடியாக வருகை தந்ததுடன், செயற்றிட்டத்தின் இரண்டாம் பாகம் 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னின்று செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

செயற்றிட்ட அடைவுகள்:

image22022ஆம் ஆண்டு முற்றுமுழுதாகப் பத்திரிகைகளும் இதழ்களும் மாத்திரமே இச்செயற்றிட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டன. தொடர்ந்து 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் இலங்கை சார்ந்த நூல்கள், சிறப்பு மலர்கள் மற்றும் நினைவு மலர்கள்  அதிகளவில் ஆவணப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

image5தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முழுமையாக ஆவணமாக்கற் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தாலும் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அதிகளவிலான ஆவணமாக்கம் இடம்பெற்று இருக்கின்றது. 

 

 

image8இச்செயற்றிட்ட செயற்பாடுகளை இரு வருடங்கள் எண்ணிமப்படுத்திப் பதிவேற்றுவதால் குறிப்பிட்ட காலப்பகுதியில் 145,000 பக்கங்கள் இணைய வழியில் திறந்த அணுக்கத்தில் பெற்றுக்கொள்வதை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும், இரண்டு வருடக் காலப்பகுதியில் மொத்தமாக 340,889 பக்கங்களை ஆவணப்படுத்தி இலக்கிற்கு மேலதிகமாக 195,889 பக்கங்களை ஆவணப்படுத்தி இருக்கிறது. 

2024ஆம் ஆண்டு மாசி மாதம் முடிவடைந்த இச்செயற்றிட்டத்தின் ஆரம்பக் கட்டத்தினூடாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள 2,817 ஆவணங்களும் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுக் குறித்த வலைவாசலில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன.

நூல்கள் : 935

இதழ்கள் : 398

பத்திரிகைகள் : 1,227

சிறப்பு மலர்கள் : 236

நினைவு மலர்கள் : 30

இச்செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் 2024ஆம் ஆண்டுப் பங்குனி மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வலைவாசல்: யாழ்ப்பாண பொதுசன நூலகம்: https://tinyurl.com/mpf7z5ha 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *