நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 14.02.2024

Published on Author Loashini Thiruchendooran

14 பெப்ரவரி 2024, திங்கட்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, பிரித்தானியாவிலிருந்து நூலக நலன்விரும்பிகளுள் ஒருவரான சுதர்ஷன் வருகை தந்திருந்தார்.

இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் அடைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். குறிப்பாக நூலக நிறுவனத்தின் ஈழத்து ஓலைச்சுவடி நூலகம் செயற்றிட்டம் மற்றும் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிகப் பழமையான ஆவணங்கள் குறித்து நுணுக்கமாக கேட்டறிந்து கொண்டார். இவற்றுள் தனக்குத் தெரிந்த சில படைப்பாளர்களின் படைப்புகள் நூலக வலைத்தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.Sutha 1 Sutha2

Sutha3 Sutha4

அத்துடன் நூலக நிறுவனம் பற்றிய மேலதிக தகவலுக்காக 15 நிமிடங்கள் கொண்ட விளக்கக்காட்சியும் இவருடன் பகிரப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

Sutha5

நூலக நிறுவனம் சார்பில் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன், நூலக பிரதம நிறைவேற்று அலுவலகர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இச்சந்திப்பில் பங்கு கொண்டனர்.