தமிழ் எண்ணிம நூலக (www.noolaham.org) வலைத்தளம் இன்றுடன் (11.01.2011) ஏழு மில்லியன் தடவைகளுக்குமேல் பார்வையிடப்பட்டுள்ளது. இது சுமார் 3 ஆண்டுகள், நான்கரை மாதங்களுக்கான புள்ளிவிபரம் ஆகும்.
நூலக வலைத்தளமானது மீடியாவிக்கியில் இயங்குகிறது. 27.08.2007 அன்று உள்ளிடப்பட்ட இத்தளம் 2007 செப்ரெம்பரில் இருந்து விரிவாக்கப்பட்டுவருகிறது. இப்பொழுது ஏறத்தாழ 8,500 மின்னூல் விபரப்பக்கங்கள் நூலகத் தளத்தில் உள்ளன.
இவற்றில் 5,000 க்கும் அதிகமான பக்கங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளிடப்பட்டவையாகும். அவ்வகையில் நூலக வலைத்தளத்தின் பயனாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகிறது.
இப்பொழுது ஒவ்வொருமாதமும் 200,000 க்கும் அதிகமான தடவைகள் பக்கங்கள் பார்வையிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 450 க்கும் அதிகமான வெவ்வேறான வாசகர்கள் நூலகத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர். மாதமொன்றில் வருகைதரும் வெவ்வேறான வாசகர் எண்ணிகை 9,200 ஐத் தாண்டியுள்ளது.
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தே மிக அதிகளவான வாசகர்கள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்சு போன்ற நாடுகளில் இருந்தும் கணிசமான வாசகர்கள் வருகின்றனர்.
very use full this library