நூலகத்தில் அம்பலம், நடுகை இதழ்கள்

Published on Author Noolaham Foundation

“அம்பலம் குழுமம்” 2000களில் வெளியிட்ட “அம்பலம் இதழ்”, “நடுகை கவிதை இதழ்” முதலியன உட்பட அவர்களது அனைத்து வெளியீடுகளையும் முழுமையாக நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி, திறந்த அணுக்கத்தில் உலகலாவிய ரீதியில் பகிர்வதற்கான அனுமதியினை அதன் ஆசிரியர் த.பிரபாகரன் 25/09/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகரிடம் நிறுவனத்தின் யாழ்ப்பாண நிகழ்ச்சித்திட்ட அலுவலகத்தில் வைத்து கையளித்தார். மேலும் அம்பலம் ஆசிரியர் த.பிரபாகரன் அவர்களால் “நெம்பு” எனும் பெயரில் அமைந்த இளைஞர்களுக்கான ஒரு மாத இதழும் விரைவில்… Continue reading நூலகத்தில் அம்பலம், நடுகை இதழ்கள்

Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது

Published on Author Noolaham Foundation

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து மாதம் ஒருமுறை பிரசுரிக்கப்பட்டு நாட்டின் பல பாகங்களிலும் விற்பனைக்குள்ளாகும் Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் தொடர்ச்சியாக எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 22/09/2013 அன்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள Tamil CNN இன் காரியாலயத்தில் வைத்து அதன் ஆசிரியர் நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகரிடம் கையளித்தார். மேலும் இதுவரை வெளியான “தாய்வீடு” சஞ்சிகை வெளியீடுகளையும் இந்நிகழ்வில் நூலக நிறுவனத்திடம் Tamil CNN… Continue reading Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது

“மீள்பார்வை மீடியா சென்ரர்” தமது வெளியீடுகளை அணுக்கப்படுத்துவதற்கான அனுமதியினை அளித்தனர்

Published on Author Noolaham Foundation

சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நண்பர்கள் பலரும் இணைந்து கொழும்பிலிருந்து “மீள்பார்வை மீடியா சென்ரர்” (Meelparvai Media center) எனும் பதியப்பட்ட நிறுவனத்தின் ஊடாக வெளியிடும் வெளியீடுகளான மீள்பார்வை பத்திரிகை, மற்றும் அவர்களுடைய சஞ்சிகை வெளியீடுகளான 1) பயணம், 2) வைகறை, 3) சர்வதேசப்பார்வை முதலிய சஞ்சிகைகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 14/09/2015 அன்று கொழும்பு 9 ல் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து… Continue reading “மீள்பார்வை மீடியா சென்ரர்” தமது வெளியீடுகளை அணுக்கப்படுத்துவதற்கான அனுமதியினை அளித்தனர்

தென்றல் இதழ்களை அணுக்கப்படுத்துக்கான அனுமதி அளிக்கப்பட்டது

Published on Author Noolaham Foundation

“தென்றல்” இதழின் ஆசிரியர் திரு.க. கிருபாகரன் தென்றல் இதழ்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான உத்தியோகபூர்வ அனுமதியினை 29/06/2015அன்று மட்டக்களப்பில் தனது இல்லத்தில் வைத்து நிறுவனத்தின் தொடர்பாடல் மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகரிடம் கையளித்தார். http://tinyurl.com/ofpxzh6 மேலும் தொடர்ச்சியாக காலாண்டுக்கு ஒருமுறை வெளிவருகின்ற தென்றல் இதழ்களை, நூலக நிறுவனத்துக்கு அனுப்புவதற்கும் உடன்பாடு தெருவித்திருந்தார். நூலக வலைத்தளத்தில் தென்றல் இதழ்களை இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக உலகம் முழுவதுமுள்ள வாசகர்கள் அணுகிப் பயன்பெறமுடியும்.… Continue reading தென்றல் இதழ்களை அணுக்கப்படுத்துக்கான அனுமதி அளிக்கப்பட்டது

கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ் இலக்கிய மாநாட்டில் சிற்றிதழ்களின் ஆய்வரங்கு – தினக்குரல்

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday May 27 உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஜூன் முதல் வாரம் 2,3,4ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் இரண்டாவது நாள் ஆய்வரங்கில் முதல் நிகழ்வாக சிற்றிதழ்கள் பற்றிய ஆய்வரங்கு இடம் பெற உள்ளது. இந்தச் சிற்றிதழ்கள் அரங்கிற்கு இணைத்தலைவர்களாக பேராசிரியர் சபா ஜெயராசா, செங்கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பார்கள். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆய்வரங்களைத் தொடங்கி வைப்பார். மேற்படி ஆய்வரங்கில் ஐந்து காத்திரமான ஆய்வுரைகள்… Continue reading கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ் இலக்கிய மாநாட்டில் சிற்றிதழ்களின் ஆய்வரங்கு – தினக்குரல்