“அம்பலம் குழுமம்” 2000களில் வெளியிட்ட “அம்பலம் இதழ்”, “நடுகை கவிதை இதழ்” முதலியன உட்பட அவர்களது அனைத்து வெளியீடுகளையும் முழுமையாக நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி, திறந்த அணுக்கத்தில் உலகலாவிய ரீதியில் பகிர்வதற்கான அனுமதியினை அதன் ஆசிரியர் த.பிரபாகரன் 25/09/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகரிடம் நிறுவனத்தின் யாழ்ப்பாண நிகழ்ச்சித்திட்ட அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
மேலும் அம்பலம் ஆசிரியர் த.பிரபாகரன் அவர்களால் “நெம்பு” எனும் பெயரில் அமைந்த இளைஞர்களுக்கான ஒரு மாத இதழும் விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தப்படுகின்றன.
{{{உங்களது ஆவணங்களையும் நூலக நிறுவனத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி உலகம் முழுவதும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கு தொடர்புகொள்ளவும்.
+94 112 363 261/ +94 212 231 292}}}