ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாதுகாக்கப்பட்டுவந்த ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு 24.06.2020. புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலாசாரகூடத்தில் காலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றுச் சாதனங்கள், ஏடுகள் மற்றும் பண்டைய தொன்மை கூறும் ஆவணங்கள் மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்விதம் ஆவணம் செய்யப்பட்ட பிரதிகளை ( 28 ) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது நூலக நிறுவனத்தின்… Continue reading ஏட்டுச்சுவடிகள் ஆவணங்கள் போன்றவற்றை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி மென் பிரதிகளை கையளிக்கும் நிகழ்வு

நூலக நிறுவனத்தில் பணி வாய்ப்புக்கள்

Published on Author Noolaham Foundation

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத்தளங்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தி, பாதுகாத்து மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளார்ந்து ஆர்வம் கொண்டவர்களுக்கு நூலக யாழ்ப்பாண அலுவலகத்தின் இரு பணி வாய்ப்புக்களைப் பற்றி கீழே அறியத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஒலிநூற் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் / Audio Books Project Coordinator தொடர்பாடல் அலுவலகர் / Communication Officer விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: noolahamfoundation@gmail.com அனுப்ப வேண்டிய இறுதித் திகதி: சனவரி 19, 2020 மேலும்… Continue reading நூலக நிறுவனத்தில் பணி வாய்ப்புக்கள்

ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களை இழந்தோம்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகவும் நமது நூலக நிறுவனத்தின் (Noolaham Foundation) ஒரு தன்னார்வப் பணிப்பாளராகவும் பங்காற்றிய சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள்  25 மார்கழி 2019 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானர் என்ற துயரச்செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றோம். நூல்கள், நூலகங்கள், நூலகவியல் துறையை நெருக்கமாக ஆழமாக நேசித்த, சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகரும் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் அமைப்பாளரும் (Founder, Foundation for Library Awareness) அறிதூண்டல் மையத்தின் இயக்குநரும் (Director, Knowledge Stimulation… Continue reading ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களை இழந்தோம்

“தண்டை முழங்கு”க்கு நூலக நன்றிகள்

Published on Author Noolaham Foundation

ஆசிரியை நாட்டியகலைமாமணி மாலினி பரராஜசிங்கம் அவர்களின் “தண்டை முழங்கு” இசை நடன விழா கடந்த டிசம்பர் 7, 2019 அன்று ஸ்கார்புரோ தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுவில் நூலக நிறுவனம் பற்றி அறிமுகம் வழங்க வாய்ப்பு வழங்கியதோடு, நிகழ்வின் ஊடாக நிதிப் பங்களிப்பும் வழங்கப்பட்டது. நூலக நிறுவனத்தின் நோக்கம், செயற்பாடுகள் பற்றி நூலகம் கனடா தன்னார்வலர் வல்லிபுரம் சுகந்தன் அவர்கள் உரை வழங்கினார்.  வாய்ப்புக்கும் பங்களிப்புக்கும் நூலக நிறுவனம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகள். ஆசிரியை… Continue reading “தண்டை முழங்கு”க்கு நூலக நன்றிகள்

அவரசர வலை ஆவணமாக்கல் வேண்டுதல்: ருவிட்டர் hashtags யாகூ (yahoo) குழுக்கள்

Published on Author Noolaham Foundation

அண்மையில் டுவிட்டர் டிசம்பர் 11 இல் பழைய active இல்லாத கணக்குகள் எல்லாவற்றையும் மூடவுள்ளதாக கூறி உள்ளது.  இதனூடாக இலங்கைத் தமிழ் பேச்சும் சமூகங்கள் தொடர்பான பழைய பல பதிவுகளை நாம் இழந்துவிட வாய்ப்பு உள்ளது.  அந்த நீங்கள் முக்கியமாகக் கருதும் hashtags ஐ தயந்து எமக்கு அறியத் தரவும். யாகூ குழுக்கள் (yahoo groups) டிசம்பர் 14 இல் மூடவுள்ளன (shutting down).  இதனூடாக பதிவுகள் பொது அணுக்கம் இல்லாமல் ஆக்கப்படும்.  இலங்கைத் தமிழ் பேச்சும்… Continue reading அவரசர வலை ஆவணமாக்கல் வேண்டுதல்: ருவிட்டர் hashtags யாகூ (yahoo) குழுக்கள்

யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

Published on Author Noolaham Foundation

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பதினாறாம் ஆண்டு நிறைவையொட்டி யாழில் ஒக்ரோபர் 19, 20 ம் திகதிகளில் சிறப்பான கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.  இந்தியாவில் இருந்து 20 மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டது இதன் சிறப்பு ஆகும்.  தமிழ் விக்கிப்பீடியா உலகத் தமிழ் பேசும் சமூகங்களின் ஒர் இணைப்புத் தளமாக தொடர்ந்து செயற்பட்டு, அந்த உறவுப் பாலத்தை மேலும் பலப்படுத்தி வருகிறது. 2003 காலப் பகுதியில் திறந்த இணையம் (Open Web) பலமாக இருந்தது.  தமிழ் வலைப்பதிவுகள், மன்றங்கள்,… Continue reading யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

Noolaham Foundation preserves the past to enrich the future – lankabusinessonline.com

Published on Author Noolaham Foundation

எழுத்தாளர், ஊடகவியலாளர் ஜெகன் அருளையா அவர்கள் “Noolaham Foundation preserves the past to enrich the future” என்ற ஒரு விரிவான ஆங்கிலக் கட்டுரையை லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் செய்தித் தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இக் கட்டுரை நூலக நிறுவனத்தின் நோக்கங்கள், விழுமியங்கள், பணிகள், தேவைகள், எதிர்காலத் திட்டம் உட்பட்ட தகவல்களைப் பகிர்கிறது.  பொறுமையாகத் தகவல்களைப் பெற்று தொகுத்து வெளியிட்ட ஜெகன் அவர்களுக்கு எமது நன்றிகள்.