“தண்டை முழங்கு”க்கு நூலக நன்றிகள்

Published on Author Noolaham Foundation

ஆசிரியை நாட்டியகலைமாமணி மாலினி பரராஜசிங்கம் அவர்களின் “தண்டை முழங்கு” இசை நடன விழா கடந்த டிசம்பர் 7, 2019 அன்று ஸ்கார்புரோ தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுவில் நூலக நிறுவனம் பற்றி அறிமுகம் வழங்க வாய்ப்பு வழங்கியதோடு, நிகழ்வின் ஊடாக நிதிப் பங்களிப்பும் வழங்கப்பட்டது. நூலக நிறுவனத்தின் நோக்கம், செயற்பாடுகள் பற்றி நூலகம் கனடா தன்னார்வலர் வல்லிபுரம் சுகந்தன் அவர்கள் உரை வழங்கினார்.  வாய்ப்புக்கும் பங்களிப்புக்கும் நூலக நிறுவனம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகள்.

ஆசிரியை மாலினி பரராஜசிங்கம் அவர்கள் நடனம், இசை, நாடகம், கூத்து, யோகா, தியானம் என்று பல துறைகளில் சிறப்புப் பெற்ற பல்துறைக் கலைஞர். ரொறன்ரோவிலும் ஈழத்திலும் தன்னார்வ அடிப்படையில் பல கலைஞர்களுக்குப் பயிற்றுவித்துள்ளார். குறிப்பாக இவர் மூத்தோர்களுக்கு நடனம் பயிற்றுவித்து மேடையேற்றியுள்ளார். அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்வில் இடம்பெற்ற ஆசிரியரின் “மறந்து போகுமோ மண்ணின் வாசனை” பாடல்.