எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் நோக்கி மலையகம்

Published on Author Noolaham Foundation

‘இந்த காலத்தில் எல்லாமே கொம்பியூட்டர்தான்’ என்பதே இப்போது பலரும் உச்சரிக்கும் வசனங்களாகிப் போகுமளவுக்கு கொம்பியூட்டர் எனப்படும் கணிணியும் அதனோடு இணைந்த இணைய (இன்டர்நெட்) பாவணையும் வந்துவிட்டது. விரும்பியோ விரும்பாமலோ அந்த தொழிநுட்பம் சார்ந்து நமக்கான தெரிவுகளைச் செய்யத் தூண்டப்படுகிறோம். வீட்டுக்கு ஒரு கணிணியும் ஆளுக்கொரு தொலைபேசியும் இப்போது அத்தியாவசியமாகிவிட்டது. இணையப் பாவனை பரவலாக்கப்பட்டு கைப்பேசியிலேயேகூட இணைய வசதியைப் பெறும் நிலைமை இன்று உள்ளது. இந்த வளர்ச்சி காலகட்டத்திற்குள் நாம் எவ்வாறு நமது முன்னோக்கிய பயணத்திற்கு இந்த கணிணி… Continue reading எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் நோக்கி மலையகம்

பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

Published on Author Noolaham Foundation

அழிவை எதிர்நோக்குகின்ற, எதிர்காலத்தில் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு துணைநிற்க கூடிய ஆவணங்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எண்ணிம வடிவில் ஆவணப்படுத்துவதற்காக பிரித்தானிய நூலகத்தினால் (British Library) தொடங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தான் Endangered Archive Program (EAP). இதனடிப்படையிலான செயற்றிட்டங்கள் பல்வேறு நாடுகளில் EAP தொடரிலக்கத்துடன் பிரித்தானிய நூலக அனுசரணையில் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicheri இலிந்து மேற்கொள்ளப்படும் EAP 458 குழுவினர் நூலக நிறுவனத்திற்கு எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல்… Continue reading பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

ஒரு சிறு தீப்பொறி – சேரன்

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday April 15 2012 சென்ற வாரம் நூலகம் நிறிவனத்தினரின்  கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில்  தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.… Continue reading ஒரு சிறு தீப்பொறி – சேரன்

எரிக்க முடியாத நூலகம் | அந்தனி ஜீவா

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday 08 April 2012. நமது யாழ். நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் நம்மவர்கள் எரிக்க முடியாத நூலகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆம் எரிக்க முடியாத நூலகத்திற்கு ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. ஏழு ஆண்டுகள் நிறைவு விழாவின் பொழுது நூலக நிறுவனம் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அது மாத்திரமல்ல சிறப்பான ஆண்டு விழாவையும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒரு அறையில் வாடகை செலுத்தி அலுவலகமாக நூலக நிறுவனம் இயங்குகிறது. நூலக நிறுவனத்தின்… Continue reading எரிக்க முடியாத நூலகம் | அந்தனி ஜீவா

வன்னியில் அழிந்த நூல்கள்

Published on Author Noolaham Foundation

– தீபச்செல்வன் வன்னியில் உள்ள பிரதேச நூலகங்களின் நூல்கள் முழுவதும் கடந்த யுத்தத்தில் அழிந்து போயுள்ளன. இதனால் மீள்குடியேறிய இடங்களில் நூலகங்களை மீண்டும் திறப்பதில் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மீள்குடியேறிய மக்களுக்குரிய வாசிப்பிற்கும் புதினங்களை அறியவும் இவை பாரிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சியில் ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்ற பொழுது நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றன கிடைப்பதில்லை என்று அந்தப் பகுதி மாணவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தப் பகுதியில் உள்ள நூலகங்கள் அழிந்து போயிருப்பதால் குறித்த பத்திரிகைகளை வாசிக்கும் வசதி… Continue reading வன்னியில் அழிந்த நூல்கள்

எமது சமுகத்தின் அறிவினைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், பரவலாக்குதல்

Published on Author Noolaham Foundation

சிவானந்தமூர்த்தி சேரன், பொறியியற்பீட மாணவன் (1ஆம் வருடம்) மொறட்டுவ பல்கலைக்கழகம். பிரதம செயற்பாட்டு அதிகாரி,  நூலக நிறுவனம். இனம் அல்லது சமூகம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்குவதும் முக்கியமாகப் தனது அறிவை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வதும் அவசியமாகும். இன்றைய காலகட்டத்தை பொறுத்தமட்டில் அறிவு பாதுகாப்பு, ஆவணப்படுத்தல், பரவலாக்கம் என்ற விடயங்களில் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக எமது தமிழ் இனம் அல்லது சமூகம் இது தொடர்பாக பெரிய… Continue reading எமது சமுகத்தின் அறிவினைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், பரவலாக்குதல்

இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

Published on Author Noolaham Foundation

By பேராசிரியர் இரா சிவசந்திரன் நூலக நிறுவனம் (www,noolahamfoundation.org) மின்நூல் உருவாக்கத்தினைப் பரவலாக்கும் பணிகளை யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா சிவசந்திரன் தமிழர் எண்ணிம நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய… Continue reading இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்