யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து கடந்த சனிக்கிழமையன்று (16 ஜூன் 2018) நடத்திய பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறையானது மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருந்தது. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்களால், பயிற்சிக்கு வந்திருந்த ஆர்வலர்களுக்கு, பல்வேறு நிலைகளில் (நல்ல நிலையில் உள்ளவை, கறையான் அரித்தவை, தெளிவானவை, தெளிவற்றவை) கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டன. ஓலைச்சுவடிகளைத் தூய்மைப்படுத்தும் வழிவகைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களின் பின்னர் ஓலைச்சுவடிகளை வாசிக்கும் வழிமுறைகளும்… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

Published on Author தண்பொழிலன்

‘அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கின்றன. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள்  (முந்நாள் உயிரியல் துறைத் தலைவர், விவசாயபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இடம்: அண்ணாமலை கனடா (101-1240 Ellesmere Rd, Scarborough, ON M1P 2X4) காலம்: சனிக்கிழமை (16 ஜூன் 2018) பி.ப. 1.00 முதல் பி.ப. 3.00 வரை பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

திருகோணமலையில் விக்கிப்பீடியா – நூலகம் பட்டறை நவம்பர் 26, 2017

Published on Author தண்பொழிலன்

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் ஆகியன இணைந்து எதிர்வரும்  நவம்பர் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில்  ஒரு முழுநாட்பட்டறையை  நிகழ்த்த இருக்கின்றன. இப்பயிற்சிப்பட்டறையானது, இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது. வரோதய நகரின் கன்னியா வீதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஞாயிறு பகல் 9 மணி முதல் மாலை 2 மணி வரை இப்பட்டறை இடம்பெறும். நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பொதுவகம், ஆவணகம்,  தொழிற்கலை ஆவணப்படுத்தலுக்கான அறிமுகம்,  நூலகத்தின் பிரதான செயற்றிட்டங்கள்… Continue reading திருகோணமலையில் விக்கிப்பீடியா – நூலகம் பட்டறை நவம்பர் 26, 2017

நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு

Published on Author Noolaham Foundation

நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு   இணையத்தில் தமிழ் மொழி பயன்பாடு பல்லூடக ஆவணப்படுத்தலில் நூலக நிறுவனம் விக்கிபீடியா அறிமுகம் நேரம் : பி.ப. 02:30 – 06:00 மணி காலம் : 08.04.2017 சனிக்கிழமை இடம் : நூலக நிறுவனம் . இல 100 , ஆடியபாதம் வீதி,கொக்குவில் , யாழ்ப்பாணம் கலந்து கொள்ளவிரும்பின் உங்கள் முன்பதிவுகளை மின்னஞ்சல் மூலமாகவோ குறுந்தகவல் மூலமாகவோ விரைவில் அறியத்தரவும் உத்தமம் infittsl@gmail.com +0094 766 427… Continue reading நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு

“பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

Published on Author Noolaham Foundation

நூலகத்தின் ஏற்பாட்டில் “பனையோலை – ஆவணப்படுத்தல் செயலமர்வு” 09.09.2012அன்று யாழ்ப்பாணம், ‘தொடர்பகம்’ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு நூலகம் நிறுவனத்தின் யாழ் இணைப்பாளர் திரு கே. கௌதமன் தலைமை வகித்தார். “இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தலின் அவசியம்” என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு. குருபரன், “இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தல் சார்ந்து இன்றைய எமது நிலை” என்ற தலைப்பில் முனைவர் ஜெ. அரங்கராஜ், “சர்வதேச நியமங்களினுடனான உலக நாடுகளின் ஆவணப்படுத்தல்” என்ற தலைப்பில்… Continue reading “பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

உயில் கலை இலக்கிய சங்கத்தின் புனைவும் புதிதும் நூல் வெளியீடு – தினமுரசு

Published on Author Noolaham Foundation

THINAMURASU Monday May 21   உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு.குணேஸ்வரனின் புனைவும் புதிதும் நூல் வெளியீடும் மற்றும் புதிய நூலக செய்திமடல் அறிமுக நிகழ்வும் நேற்றும் முன் தினம் பி.ப. 3.00 மணியளவில் கொற்றாவத்தை பூமகள்சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாத்திரிகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் ஆய்வுரையை மூத்த எழுத்தாளர் தெணியான், மதிப்பீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை விரிவுரையாளர் ராஜேஸ்கண்ணன் ஆகியோர் வழங்கினர். புதிய நூலக செய்திமடல் அஜந்தகுமார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.