
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் ஆகியன இணைந்து எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் ஒரு முழுநாட்பட்டறையை நிகழ்த்த இருக்கின்றன.
இப்பயிற்சிப்பட்டறையானது, இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது. வரோதய நகரின் கன்னியா வீதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஞாயிறு பகல் 9 மணி முதல் மாலை 2 மணி வரை இப்பட்டறை இடம்பெறும். நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பொதுவகம், ஆவணகம், தொழிற்கலை ஆவணப்படுத்தலுக்கான அறிமுகம், நூலகத்தின் பிரதான செயற்றிட்டங்கள் முதலியன பற்றிய அறிமுகம் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. மேலதிக தகவல்களை, பட்டறைக்கான விக்கிப்பக்கத்தில் அல்லது தொழிற்கலை ஆவணப்படுத்தலுக்கான கூகிள் குழுமத்தில் கண்டுகொள்ளலாம்.