நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள், ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவை (Annual Plan and Budget) முன்வைத்தும், அதற்குத் தேவையான வளங்களை வளந் திரட்டுதல் திட்டம் (Resource Mobilization Plan) ஊடாகவும் முன்னெடுக்கின்றன. இந்தப் பொறிமுறை நூலக நிறுவனமயாக்கச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நாம் இந்தப் பொறிமுறையை கூடிய நேர்த்தியுடன் கடந்த சில ஆண்டுகளில் பின்பற்றி வருகிறோம்.
நூலக நிறுவனத்தின் 2018 ஆம் ஆண்டு திட்டமிடல் தற்போது தொடங்கி உள்ளது. 2017 பல புதிய செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தோம். இந்தச் செயற்திட்ட விபரங்களை இங்கு நீங்கள் பார்க்கலாம். பல செயற்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன என்றாலும், மேலும் பல வளங்கள் இல்லாமையால் எதிர்பார்க்கப்பட்டது போன்று முன்னெடுக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் இந்தச் செயற்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும், விரிவுபெறும் என்று எதிர்பாக்கிறோம். இந்தச் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மற்றும் புதிய செயற்திட்டங்களும் எண்ணங்களும் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக சந்திப்புக்களில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கப்படுகிறீர்கள். மேலும், வியூக முன்னுரிமைகள் (Strategic Priorities), பயனர் சேவைகள் (User Service), நிர்வாகம் மற்றும் தொடர்பாடல் (Administration and Communication), வளந்திரட்டல் (Resource Mobilization) தொடர்பாகவும் உங்கள் உள்ளீடுகள் வரவேற்கப்படுகின்றன.
கருத்துதிர்ப்புச் (brainstorm) செய்ய உதவும் சில இணைப்புகள்:
- செயற்திட்ட முன்மொழிவு விபரப்பட்டியல் – Project Ideas Inventory
- நூலக உள்ளடக்க வகைகள் – NF Content Types
- செயல்திட்டம் 2020 – Roadmap 2010
இந்தச் செயலாக்கத்தின் ஊடாக உருவாக்கப்படும் 2018 ம் ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவு, 2018 வளந்த் திரட்டுதல் திட்டம் ஆகியன பெப்ரவரி 2018 இல் வெளியிடப்படும்.
தொடர்புகள்: noolahamfoundation@gmail.com