இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்

Published on Author Noolaham Foundation

By கானா பிரபா இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம் ஆசியாவின் மிகப்பெரும் அறிவுக்களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் அழித்து ஒழிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டது. இந்த நூலகம் மீளவும் நிர்மாணிக்கப்பட்டு அண்மைய வருஷங்களில் மீளவும் இயங்கி வந்தாலும் இன்னமும் முன்னர் நிலைபெற்றிருந்த நூலகத்தில் இருந்த அரிய பல ஆவணங்கள், நூல்கள், ஏட்டுச் சுவடிகளின் மூலப் பிரதிகள் இல்லாது அந்த அரிய பல அறிவுச் சொத்துக்கள் இனிமேல் கிட்டாத நிலை தான் இருக்கப்போகின்றது. இது ஒருபுறமிருக்க,… Continue reading இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்

எமது சமுகத்தின் அறிவினைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், பரவலாக்குதல்

Published on Author Noolaham Foundation

சிவானந்தமூர்த்தி சேரன், பொறியியற்பீட மாணவன் (1ஆம் வருடம்) மொறட்டுவ பல்கலைக்கழகம். பிரதம செயற்பாட்டு அதிகாரி,  நூலக நிறுவனம். இனம் அல்லது சமூகம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்குவதும் முக்கியமாகப் தனது அறிவை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வதும் அவசியமாகும். இன்றைய காலகட்டத்தை பொறுத்தமட்டில் அறிவு பாதுகாப்பு, ஆவணப்படுத்தல், பரவலாக்கம் என்ற விடயங்களில் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக எமது தமிழ் இனம் அல்லது சமூகம் இது தொடர்பாக பெரிய… Continue reading எமது சமுகத்தின் அறிவினைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், பரவலாக்குதல்

ஆவணப்படுத்தல் இயக்கம்

Published on Author Noolaham Foundation

அறிமுகம் இன்று தமிழ்மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆயிரக்கணகானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ‘நூலகம்’ செயற்றிட்டம் – நிறுவனம் என்ற கட்டங்களைத் தாண்டி சமூக இயக்கமாகத் தொழிற்படத் தொடங்கியுள்ளது. பல்வேறு துறை சார்ந்தோர் – பல்வேறு அரசியல் சார்ந்தோர் – பல்வேறு சமூகச் செயற்பாடுகள் சார்ந்தோர் என பல்வேறுதரப்பினரையும் உள்வாங்கியுள்ளதோடு ஆவணப்படுத்தல் என்ற புள்ளியில் ஒன்றிணையக்கூடிய சகல தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இயங்க முயற்சிப்பதை அவதானிக்கலாம். நிறுவனம் என்ற கட்டமைப்பிற்கு வெளியே பிரதேச ரீதியான கட்டமைப்புக்கள், சர்வதேச… Continue reading ஆவணப்படுத்தல் இயக்கம்

இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

Published on Author Noolaham Foundation

By பேராசிரியர் இரா சிவசந்திரன் நூலக நிறுவனம் (www,noolahamfoundation.org) மின்நூல் உருவாக்கத்தினைப் பரவலாக்கும் பணிகளை யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா சிவசந்திரன் தமிழர் எண்ணிம நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய… Continue reading இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

தகவல் வலையம்

Published on Author Shaseevan

தகவல் வலையம் (Information Network) செயற்றிட்டம் மூலம் எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு, கல்வி மேம்பாடு என்ற புள்ளிகள் சார்ந்து இயங்குவதற்கான ஆரம்பக் கட்டமைப்புக்களை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதேசங்கள் சார்ந்து தமிழ் நூலகங்கள், கல்வி நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள், பிற நிறுவனங்கள் போன்றவற்றிற்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதனூடாக பல்வேறு தளங்களில் அவர்கள் சமூகம் சார்ந்து இயக்கமுறுவதை அதிகப்படுத்தலாம். இதனூடாக மேற்குறிப்பிட்ட தளங்களில் இயங்குவோர் இணைந்ததாகப் பிரதேச ரீதியாக உருவாக்கப்படும் குழுக்களை… Continue reading தகவல் வலையம்

சுதந்திரத்திற்கான சுதந்திர முன்முயற்சி – உங்கள் நூலகம்

Published on Author Noolaham Foundation

ஈழத்தமிழர்களின் நூலகம் வலைத்தளம் பற்றிய சிறு அறிமுகம் – தனபால் சே அச்சு ஊடக வருகை என்பது வரலாற்றில் இணையற்ற மாபெரும் நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் அச்சு ஊடகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுடன் ஐரோப்பியர்களுக்கு வந்துசேர்ந்தது. ஆனால் மற்றவர்களுக்கு (ஏதோ வகையில் இன்றுவரையிலும் தொடரும்) கொடிய காலனிய அடிமைத்தனத்துடன் தான் வந்து சேர்ந்தது. சகிக்கவொண்ணா அடிமைத்தனத்தை எதிர்த்து அளப்பரிய தியாகத்துடன் விடுதலைக்குப் போராடிவரும் மக்களுக்கு வலையூடகம் புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளது. தெற்காசியாவில் தேசிய விடுதலைக்கான… Continue reading சுதந்திரத்திற்கான சுதந்திர முன்முயற்சி – உங்கள் நூலகம்

எண்ணிம இடைவெளி

Published on Author Gopi

தொடர்பாடல், தகவல் நுட்ப வளர்ச்சியானது இலங்கை போன்ற நாடுகளிலும் அறிவுசார் அபிவிருத்திக்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. கணினி, இணையம் ஆகியவற்றின் பயன்பாட்டைப் பரவலாக்குவது அனைவருக்கும் சந்தர்ப்பமளிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. ஆயினும் தகவல் நுட்பத்தின் வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் ஒரேயளவில் கிடைப்பதில்லை. எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் கிடைப்பதிலுள்ள இந்த ஏற்றத்தாழ்வு எண்ணிம இடைவெளி (Digital divide) எனப்படுகிறது. காரணங்கள் சமூகப் பின்னணி, பொருளாதார நிலை, பால், இனம், மொழி, வாழும் பிரதேசம் போன்ற பல்வேறு காரணங்களால் எண்ணிம… Continue reading எண்ணிம இடைவெளி