ஆவணப்படுத்தலுக்கான புத்தக அன்பளிப்பு

Published on Author Loashini Thiruchendooran

கனடா ரொரொண்டோவில் வசித்து வருகின்ற நூலக நிறுவன நலன்விரும்பிகளுள் ஒருவரான பி.ஜெ. டிலிப்குமார் அவர்கள், கடந்த 03.10.2023 அன்று தன்னிடமுள்ள 248 நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டிற்காக அன்பளிப்பு செய்திருக்கிறார். கிளிநொச்சியில் வசிக்கும் தனது சகோதரனான கருணாநிதி அவர்களின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள நூலக அலுவலகத்தில் நேரடியாக கையளிக்கச் செய்திருக்கிறார். இவற்றுள் நூல்கள், இதழ்கள், நினைவு மலர்கள் மற்றும் பத்திரிகைகள் என்பன காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   இந்நிகழ்வில் றஞ்சுதமலர் நந்தகுமார் (பிரதம நிறைவேற்று அலுவலகர்), மியூரி கஜேந்திரன்… Continue reading ஆவணப்படுத்தலுக்கான புத்தக அன்பளிப்பு

எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Loashini Thiruchendooran

  எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி அவர்கள் தமது நூல்களையும், அவற்றை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும் நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். அவரது நூல்கள்:-   பழந்தமிழர் நடுகற் பண்பாடு பண்டைத்தமிழர் பண்பாட்டுக்கோலங்கள் பட்டிநகர் கண்ணகி ஆலய வரலாறு (ஆய்வு) பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும் திருக்கோவில் பிரதேச இலக்கிய வரலாறு பண்டைய ஈழத்தமிழர்          இவை தவிர ஏற்கனவே பதிவேற்றப்பட்டு நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதிருந்த “ஈழத்தமிழர் வரலாற்றுச்சுவடுகள்”… Continue reading எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 11.06.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான வானொலி – திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர்  என பல பெருமைக்குரிய கலைஞர் ஆனந்தராணி, பாலேந்திரா அவர்கள்  கடந்த 11.06.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.   இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் Sri Lankan Airlines விமானங்களில் முதன் முதலாக பல வருடங்கள் ஒலித்த தமிழ்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 11.06.2023

நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலரான அம்பிகா சத்குணநாதன் ஆகியோர் கடந்த 26.05.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் குறிப்பாக அம்பிகா சத்குணநாதன் அவர்கள் நூலக நிறுவனத்தின் சட்ட ரீதியான பிரச்சினைகள், தூதரகங்களுடன் எவ்வாறு ஒருங்கிணந்து செயற்படலாம், ஏனைய… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு Comdu.it அமைப்பினரின் வருகை

Published on Author Loashini Thiruchendooran

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நிலையான வளர்ச்சிக்காக, புலம்பெயர்ந்தோரின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அறிவைப் பயன்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ள புலம்பெயர் தன்னார்வலர்களின் உலகளாவிய வலையமைப்பான Comdu.it அமைப்பில் இருந்து நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்தைப் பார்வையிடுவதற்காக “ராஜா நிஷாந்த்” அவர்கள் 09.08.2022 அன்று வருகை தந்திருந்தார்.  அவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளினை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக நிறுவனத்திற்கு இரு வன் தட்டுக்களையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தார் நூலக நிறுவனம் சார்பில் நூலக ஆளுகைச் சபை அங்கத்தவர் த. சுஜீவன், பிரதம நிறைவேற்று… Continue reading நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு Comdu.it அமைப்பினரின் வருகை

அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் ,மாகாண, வலய மட்ட பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் பரிகார கற்றல் கையேடுகள் உட்பட மாணவர் கற்றல் கற்பித்தல் சார் விடயங்கள் போன்றவற்றை சேகரித்து எண்ணிமப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான எழுத்து மூல அனுமதியை வடமாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுற்றறிக்கை மூலம் வட மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் வலயப்பாடசாலை அதிபர்களை கேட்டுள்ளார்.   இதன் முதற்கட்டமாக , துணுக்காய்… Continue reading அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலையில் கலாநிதி படிப்பினை மேற்கொள்ளும் ‘மார்க் ப்ளம்போர்த்’ வருகை

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘மார்க் ப்ளம்போர்த்’ மற்றும் மக்கில் பல்கலைக்கழகம், மொன்ராரியல் கனடாவில் முதுகலைமானி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘ஹரினா அற்ரொன்’ முதலியோர் வருகைதந்து, நூலக செயற்பாடுகளினைக் கேட்டறிந்ததுடன், சில எண்ணிம ஆவணப்படுத்தல் சார் இணைச் செயற்பாடுகளை நூலகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் விருப்பம் தெரிவித்திருந்தனர். http://noolahamfoundation.org/wiki/index.php?title=News%2F2015%2F2015.09.01