கனடா ரொரொண்டோவில் வசித்து வருகின்ற நூலக நிறுவன நலன்விரும்பிகளுள் ஒருவரான பி.ஜெ. டிலிப்குமார் அவர்கள், கடந்த 03.10.2023 அன்று தன்னிடமுள்ள 248 நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டிற்காக அன்பளிப்பு செய்திருக்கிறார்.
கிளிநொச்சியில் வசிக்கும் தனது சகோதரனான கருணாநிதி அவர்களின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள நூலக அலுவலகத்தில் நேரடியாக கையளிக்கச் செய்திருக்கிறார். இவற்றுள் நூல்கள், இதழ்கள், நினைவு மலர்கள் மற்றும் பத்திரிகைகள் என்பன காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் றஞ்சுதமலர் நந்தகுமார் (பிரதம நிறைவேற்று அலுவலகர்), மியூரி கஜேந்திரன் (எண்ணிமப் பாதுகாப்பு மற்றும் நூலக முகாமையாளர்) மற்றும் ஏனைய நூலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நூலகத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் இந்நூல்களை அன்பளிப்பு செய்த பி.ஜெ.டிலிப்குமார் அவர்களுக்கு நூலக நிறுவனம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
நீங்களும் உங்களது படைப்புகளை அல்லது உங்களிடமுள்ள இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்த விரும்பினால் நூலகத்துடன் தொடர்பினை