கிளிநொச்சி மாவட்ட நூலகர்கள் சந்திப்பு

Published on Author Loashini Thiruchendooran

  2022-12-27 அன்று வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான திட்ட விளக்க கூட்டம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஆளுகைக்குட்பட்ட நூலகர்கள் மற்றும் நூலக உதவியாளர்களுக்கு இடம்பெற்றது. இதில் நூலக நிறுவனத்தின் சார்பாக சுஜீவன் தர்மரத்தினம், சோபன் ரவிச்சந்திரன், ஜோர்ஜ் யேசு யுஜேனியன் ஆகியோர் பங்குபற்றினர். இக்கூட்டத்தில் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள், நூலக மற்றும் ஆவணக வலைத்தளங்கள் பற்றிய தெளிவுப்படுத்தல் மற்றும் கிளிநொச்சி பிராந்திய செயற்றிட்டம் சார்ந்த… Continue reading கிளிநொச்சி மாவட்ட நூலகர்கள் சந்திப்பு

சுன்னாகம் பொது நூலகக் கண்காட்சியில் நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சுன்னாகம் பொது நூலக நிர்வாகத்தின் ஏற்பாட்டில்  எங்கட புத்தகங்களின் கண்காட்சியும் விற்பனையும் கடந்த 14.10.2022 அன்று யாழ்.சுன்னாகம் பொது நூலக மண்டபத்தில் ஆரம்பமானது. “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் அனைவரின் மத்தியிலும் வாசிப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மேற்படி கண்காட்சியில் நூலக நிறுவனம் பங்குபற்றியது. தொடர்ந்து நான்கு நாட்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியில் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பும் குறிப்பாக சுவடிகளின் காட்சிப்படுத்தல்கள் மற்றும் அவற்றை… Continue reading சுன்னாகம் பொது நூலகக் கண்காட்சியில் நூலக நிறுவனம்

நூல்களால் கட்டும் தேசம்

Published on Author Safna Iqbal

  ‘நூல்களால் கட்டும் தேசம்’ எனும் தலைப்பில் அமையும் இக் கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு பத்திரிகையின் 2020, ஏப்ரல் வெளியீட்டில் (பக்கங்கள் 92-96) பிரசுரமாகியுள்ளது. எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களையும் மதிப்பிட்டு எழுதும் கட்டுரைகளுக்கு மாறாக இலக்கியச் செயற்பாட்டாளர்களின் வரலாற்று வகிபாகத்தைப் பத்மநாப ஐயரை முன்நிறுத்தி ஆராய்கிறது. பண்பாட்டு விடுதலைக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தில் எழுத்தரசியலின் முக்கியத்துவத்துவத்தினை உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளின் பின்னணியில் நோக்கி, யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்புக்குப் பின்னர் நூலகப் பண்பாட்டு மேலெழுகையிலும் தமிழ்த்… Continue reading நூல்களால் கட்டும் தேசம்

“தண்டை முழங்கு”க்கு நூலக நன்றிகள்

Published on Author Noolaham Foundation

ஆசிரியை நாட்டியகலைமாமணி மாலினி பரராஜசிங்கம் அவர்களின் “தண்டை முழங்கு” இசை நடன விழா கடந்த டிசம்பர் 7, 2019 அன்று ஸ்கார்புரோ தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுவில் நூலக நிறுவனம் பற்றி அறிமுகம் வழங்க வாய்ப்பு வழங்கியதோடு, நிகழ்வின் ஊடாக நிதிப் பங்களிப்பும் வழங்கப்பட்டது. நூலக நிறுவனத்தின் நோக்கம், செயற்பாடுகள் பற்றி நூலகம் கனடா தன்னார்வலர் வல்லிபுரம் சுகந்தன் அவர்கள் உரை வழங்கினார்.  வாய்ப்புக்கும் பங்களிப்புக்கும் நூலக நிறுவனம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகள். ஆசிரியை… Continue reading “தண்டை முழங்கு”க்கு நூலக நன்றிகள்