த. சீனிவாசனுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட தமிழ்க் கணிமை விருது

Published on Author Noolaham Foundation

தமிழ்ச் சூழலில் கட்டற்ற இயக்கத்தை (Free Software and Free Culture Movement) கொள்கையிலும் செயலிலும் முன்நகர்த்திச் செல்வதில் முதன்மையான ஒரு பங்களிப்பாளரான த. சீனிவாசனுக்கு 2016 இக்கான தமிழ் இலக்கியத் தோட்டத்தின் “தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது” கிடைத்துள்ளது.  இது அவரது பரந்த பங்களிப்புக்கான ஒரு சிறு அங்கீகரிப்பே.  அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.  தமிழ்க் கணிமைக்கு அவரது விரிவான பங்களிப்பை பற்றி இங்கும், இங்கும் மேலும் அறியலாம். களத்தில் உள்ள தமிழ்க் கணிமை… Continue reading த. சீனிவாசனுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட தமிழ்க் கணிமை விருது

பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணக வலைத்தளத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஒலிப் பதிவுகளின் எண்ணிக்கை இன்று 100 இனைக் கடந்துள்ளது. நூல் வெளியீடுகளின் ஒலிப்பதிவுகள், மேடைப் பேச்சுக்கள், வாய்மொழி வரலாறுகள், மெல்லிசைப் பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் எனப் பல்வேறு பதிவுகள் இடம்பெற்றுள்ளன.   http://aavanaham.org/islandora/object/islandora:audio_collection       நூலக பல்லூடக ஆவணகத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஆக்கங்களை noolahamcollections@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.      இந்தத் தளத்தில் நீங்களும் ஆக்கங்களை அனுமதி பெற்று பதிவேற்ற… Continue reading பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்

நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத் தளம் (aavanaham.org) இன்று பொதுவில் வெளியிடப்படும் செய்தியைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.  நீண்ட காலம் எமது இலக்குகளில் ஒன்றாக இருந்த இந்தச் செயற்திட்டம் வெளிவருவது நூலக நிறுவன ஆவணப்படுத்தற் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும். நூலக பல்லூடாக ஆவணகம் (Multimedia Archiving Platform) நூலக நிறுவனத்தின் பின்வரும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது. * ஒலிக் கோப்புக்கள் (audio), நிகழ்படங்கள் (video), ஒளிப்படங்கள் (photos), எண்ணிம ஆவணங்கள் (born… Continue reading நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

Published on Author Noolaham Foundation

அழிவை எதிர்நோக்குகின்ற, எதிர்காலத்தில் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு துணைநிற்க கூடிய ஆவணங்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எண்ணிம வடிவில் ஆவணப்படுத்துவதற்காக பிரித்தானிய நூலகத்தினால் (British Library) தொடங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தான் Endangered Archive Program (EAP). இதனடிப்படையிலான செயற்றிட்டங்கள் பல்வேறு நாடுகளில் EAP தொடரிலக்கத்துடன் பிரித்தானிய நூலக அனுசரணையில் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicheri இலிந்து மேற்கொள்ளப்படும் EAP 458 குழுவினர் நூலக நிறுவனத்திற்கு எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல்… Continue reading பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

எரிக்க முடியாத நூலகம் | அந்தனி ஜீவா

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday 08 April 2012. நமது யாழ். நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் நம்மவர்கள் எரிக்க முடியாத நூலகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆம் எரிக்க முடியாத நூலகத்திற்கு ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. ஏழு ஆண்டுகள் நிறைவு விழாவின் பொழுது நூலக நிறுவனம் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அது மாத்திரமல்ல சிறப்பான ஆண்டு விழாவையும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒரு அறையில் வாடகை செலுத்தி அலுவலகமாக நூலக நிறுவனம் இயங்குகிறது. நூலக நிறுவனத்தின்… Continue reading எரிக்க முடியாத நூலகம் | அந்தனி ஜீவா

தமிழ் விக்கிப்பீடியர் இரவிசங்கர்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டம் ஏழாம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுவதையும் பத்தாயிரம் நூல்களை ஆவணப்படுத்தியுள்ளமையையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு காரணங்கள்: 1. இத்திட்டத்தில் பணியாற்றும் பலருடன் மற்ற திட்டங்களிலும் பங்களித்து வருவதால், ஒரு நண்பனாக நூலகம் குழுவினரின் சாதனையைக் கண்டு மகிழ்கிறேன். 2. சங்கத் தமிழர் காலத்துக்குப் பிறகு, தமிழர்கள் – அதுவும் இளைஞர்கள் – அதுவும் அரசு சாராமல் – அதுவும் இலங்கையின் தற்கால அரசியற் சூழலில் – மொழிக்காக ஒன்றிணைந்து ஏதாவது உருப்பபடியாகச் செய்திருக்கிறார்கள்… Continue reading தமிழ் விக்கிப்பீடியர் இரவிசங்கர்

எரிக்கமுடியாத நூலகம்

Published on Author Noolaham Foundation

(குமுதம் தீராநதி மார்ச் 2012) ” எனது தந்தையர் நாடு இறந்துவிட்டது அவர்கள் புதைத்தார்கள் அதை நெருப்பில்   நான் வாழ்கிறேன் வார்த்தை என்ற என் தாய் நாட்டில் “ ஜெர்மனியைச் சேர்ந்த ரோஸ் ஆஸ்லேண்டர் ( 1901-1988) என்ற கவிஞர் எழுதிய இந்தக் கவிதை யுத்தத்தால் சிதைக்கப்படும் எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தக்கூடியது. வீடு தகர்க்கப்படும்போது, சொந்த நிழலும்கூட எரிந்துபோய்விடும்போது,நாடென்று உரிமை பாராட்ட எதுவும் இல்லாமல்ஆகிவிடும்போது ஒரு மனிதனிடம் எஞ்சியிருப்பது சொல் மட்டும் தான். அவன் அதைக்கொண்டு… Continue reading எரிக்கமுடியாத நூலகம்