கேப்பாபுலவு : நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை
கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீளப்பெறுவதற்காக தன்னிச்சையாக உறுதியுடன் வயது பாரபட்ச்சமின்றி இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்த நூலானது 20 நாட்கள் தாண்டிய அவர்களது அறப்போரட்ட காலத்தில் வரலாற்றுப்பதிவாக வெளிவந்துள்ளது. இதில் கேப்பாபுலவின் வரலாறு, இராணுவ ஆக்கிரமிப்பு , மக்களின் மனநிலைகளை அவரவர்களின் வார்த்தைகளிலும், அறப்போரட்ட நிகழ்வுகளை கால அட்டவணையிலும் விரிவாக பதியப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர் வரலாற்றில் இவ்வாறன வரலாற்றுப்பதிவுகள் அவை நிகழும் சமகாலத்தில் எழுதப்படுவது அரிது. இந்த நூலினை நூலகத்தில் வாசிக்கலாம் http://www.noolaham.org/wiki/index.php/கேப்பாபுலவு:_நிலமீட்புக்கான_மக்கள்_போராட்டத்தின்_கதை