மட்டக்களப்பில் நூலகம் – விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை

Published on Author தண்பொழிலன்

2018 மார்ச் 31ஆம் திகதி சனிக்கிழமையன்று, நூலகம் நிறுவனமும் விக்கிப்பீடியாவும் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறையானது, மட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் கணினிக்கூடத்தில் இடம்பெற்றது.

திரு.சஞ்சீவி சிவகுமார், திரு.பிரசாத் சொக்கலிங்கம், திரு.வி.துலாஞ்சனன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பங்காற்றிய இப்பட்டறையில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த திரு.மயூரநாதன் கலந்துகொண்டு, பெறுமதியான பல கருத்துக்களை முன்வைத்தார். உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் திரு. செல்வரத்தினம் ஜெயபாலன் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல், நூலகம் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்படும் வடக்கு – கிழக்கு  – மலையக தொழிற்கலை ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தலும் ஒத்துழைப்பைப் பெறுதலும் ஆகிய இரண்டும் இப்பட்டறையின் முக்கியமான நோக்கங்களாக அமைந்தன.

ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,  ஊடகவியலாளர்கள், கணினியியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இப்பட்டறையில் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர். பட்டறையில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலரின் முயற்சியில் அடுத்த நாளே மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் பிரம்புக் கைத்தொழில் ஆவணப்படுத்தல் இடம்பெற்றமை இப்பட்டறையின் வெற்றியினைப் பறைசாற்றி நிற்கிறது.

மட்டக்களப்பு_விக்கிப்பீடியா_-_நூலகம்_பட்டறை_1
திரு.மயூரநாதன் திரையருகில் அமர்ந்திருந்து அவதானிக்க, திரு.சொக்கலிங்கம் பிரசாத் பட்டறையை ஆரம்பித்து உரையாற்றுகிறார். அவரருகே இடமிருந்து வலமாக திரு.சஞ்சீவி சிவகுமார், திரு.செல்வரத்தினம் ஜெயபாலன், திரு.வி.துலாஞ்சனன் ஆகியோரும் கணினி இயக்குநர்கள் இருவரும் நிற்கின்றனர்.
திரு.மயூரநாதன் நிகழ்த்துகையை நடாத்துகிறார்

பங்கேற்பாளரில் ஒரு பகுதியினர். பின்வரிசையில் திரு.மயூரநாதன் அமர்ந்திருந்து கவனிக்கிறார். திரு.வி.துலாஞ்சனன்,  ஊடகவியலாளர் திரு.செ.துஜியந்தன் மற்றும் கவிஞர் திரு.செ.மதன் ஆகியோரின் ஐயங்களைத் தீர்க்கிறார்.

திரு.சஞ்சீவி சிவகுமார் (படத்தில் இல்லை) நடாத்தும்  நிகழ்த்துகையை, பங்கேற்பாளர்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்.