நூலக நிறுவன வேலைவாய்ப்பு – எண்ணிம நூலக அலுவலர் – மீதரவு / Digital Library and Metadata Officer

Published on Author Noolaham Foundation

பணி வெற்றிடம்

நூலக நிறுவனமானது (noolahamfoundation.org) இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படுத்தும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.

 

2005 முதல் இலங்கையின் முதன்மையான தமிழ் எண்ணிம ஆவணக் காப்பகமாகத் திகழும் நூலக நிறுவனம் இதுவரை பல்வேறு செயற்றிட்டங்களூடாக 100,000 இற்கும் அதிகமான ஆவணங்களை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்துள்ளது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஏட்டுச் சுவடிகள், அழைப்பிதழ்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒலிப்பதிவுகள், நிகழ்படங்கள், வாய்மொழி வரலாறுகள் போன்ற சகலவிதமான ஆவணங்களையும் நூலக நிறுவனம் பதிவுசெய்து வருகிறது. அவ்வகையில் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான முதன்மையான உசாத்துணைத் திரட்டினை நூலக நிறுவனம் உருவாக்கியுள்ளது.

நூலக நிறுவனத்தின் சேகரிப்பு மேம்பாட்டுத் திட்டம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது மக்களால் தங்கள் தகவல் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய பயன்படுத்தக்கூடிய வகையில் முக்கியமான தொகுப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. 

 

பணித் தலைப்பு – எண்ணிம நூலக அலுவலர் (Digital Library Officer – Metadata)

பணிக்கான திட்டம்-  சேகர அபிவிருத்தி திட்டம்

பணி இடம் –   யாழ்ப்பாணம்

பணி வகை – முழு நேரம்

பணிக் காலம்- 1 ஆண்டு  தேவை ஏற்படின் அதிகரிக்க முடியும்

 

கடைமைகளும் பொறுப்புக்களும்

  1. வினைத்திறனாகவும் உறுதியாகவும் நன்றாக மாதிரிப்படுத்தப்பட்ட விபரத்தரவு (Metadata) பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தல்
  2. நூலக வலைத்தளத்திலுள்ள ஆவணங்கள் நிறுவனக் கொள்கைகளுக்கும் நியமத்துக்கும் ஏற்ற வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தல்.
  3. அனைத்து வகையான சரிபார்த்தல் விபரங்களையும் மாற்றங்களையும் முறையாக ஆவணப்படுத்தல்
  4. ஆவணங்களின் விபரத்தரவு மற்றும் உள்ளடக்கங்களை முறையாக வலைத்தளத்தில் பதிதலும் உறுதிப்படுத்தலும்
  5. நூலக வலைத்தளத்தின் ஒவ்வொரு சேகரங்கள் தொடர்பில் அவற்றை  முழுமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்
  6. காப்புப்படியிலுள்ள விடயங்களும் வலைத்தளத்திலுள்ள விடயங்களும் ஒரேவகையில் பேணப்படுவதை உறுதிப்படுத்தல்

 

எண்ணிம நூலக அலுவலருக்கான  தகுதிகள்

  1. கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல் 
  2. நூலக டிப்புளோமா கற்கை அல்லது அதற்கு சமனான கற்கை நெறியினைப் பூர்த்தி செய்திருத்தல் 
  3. கணனி, இணையத்தளங்களை பயன்படுத்தும் அறிவும் அனுபவமும் (Digital and Information Literacy)
  4. தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு இலக்கணப்பிழைகளின்றியும் குறிப்பிட்ட வேகத்துடனும் செய்யும் ஆற்றல்
  5. வாசிப்பு மற்றும் நூல்கள் சார்ந்த அக்கறையும் அனுபவமும் இருத்தல்

 

மேலதிக  தகுதிகள்

  1. நூலகம் மற்றும் காப்பகப்படுத்தல் அனுபவம்
  2. மின்வருடல் தரங்கள் மற்றும் விபரத்தரவு தொடர்பான அறிவும் அனுவமும்
  3. ஆவணங்கள் சார்ந்த பதிப்புரிமைகள் தொடர்பான அறிவு

 

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளோர் தங்களது சுயவிபரக் கோவையையும்   அறிமுகக் கடிததினையும் noolahamfoundation@gmail.com என்ற முகவரிக்கு (Attention CEO – Application for Digital Library Officer – Metadata) எதிர்வரும் டிசம்பர் 30, 2021 அன்றோ அதற்கு முன்பதாகவோ அனுப்பி வைக்கலாம்.