சமூகத்தினை நோக்கிய தசாப்தம் கடந்த பயணத்தின் தொடர்ச்சியில் “இலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஓர் எண்ணிம ஆவணக்காப்பகம்-
“நூலக நிறுவனம்”
கனடாவில் 09/05/2015 அன்று இடம்பெற்ற தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் ஆவண இறுவெட்டு வெளியீட்டு வைபவத்தில் நூலகத்தின் தனார்வலர்களின் ஒருவரான சுதர்சன் ஶ்ரீனிவாசன் (அருண்மொழிவர்மன்) அவர்கள், “நூலகத்துடன் உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து பங்களிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
நூலகத்துடன் அனைவரும்
# அரிய பலஆவணங்களினைப் பகிந்தும்,
# அதற்கான நிதிப் பங்களிப்பினை வழங்கியும்
# இதர பலவழிகளிலும் இணைந்து செயற்பட முடியும் என்பதனையும், அனைவருக்குமான சமூக அர்ப்பணிப்பின் அவசியத்தினையும் நினைவுகூர்ந்தார்.
மேலும் 15,000க்கும் அதிகமான எண்ணிம ஆவணங்களுடன் பயணிக்கும் நூலகத்தின் தன்னார்வுச் செயற்பாட்டுப் பயணத்தில் பங்களிப்பு செய்வதினூடாக எமது சமூகத்தின் வரலாற்றுக்கடமையினை பெருமைப்படுத்த முடியும் என்பதனை நூலகத்தின் சாதனைகளைச் சுட்டிக்காட்டியதனூடாக அறியத்தந்திருந்தார்.
ஏற்கனவே 26/04/2015 அன்று லண்டனிலும் இடம்பெற்ற இதே இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் நூலகத்தின் சாதனைகள் பற்றிய உரை இளையதம்பி தயானந்தாவினால் ஆற்றப்பட்டும் இருந்தது.
இந் நிகழ்வுகளில் நூலகத்தினைப் பிரதித்துவப்படுத்தி நூலகத்தின் இயக்குணரும், இத் தவில் தட்சணாமூர்த்தி பற்றிய ஆவணப்படுத்தலில் உழைத்தவருமான திரு.பத்மநாப ஐயர் இரத்தின ஐயர், லண்டன் தன்னார்வலர்களில் ஒருவரான திரு. பரணிதரன் போன்ற பல நூலக நண்பர்களும் கலந்து கொண்டு நூலகத்தினை பெருமைப்படுத்தியதோடு, ஈழம் பெருமைப்படும் “தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களையும்” அவ்விடத்தில் சிறப்பித்திருந்தனர்.