நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவை (Annual Plan and Budget) முன்வைத்தும் அதற்குத் தேவையான வளங்களை வளந் திரட்டுதல் திட்டம் (Resource Mobilization Plan) ஊடாகவும் முன்னெடுக்கின்றது.  இந்தப் பொறிமுறை நூலக நிறுவனமயாக்கச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.  நாம் இந்தப் பொறிமுறையை  நேர்த்தியுடன் கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல் தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் நூலக நிறுவனத்தின் பங்கேற்பாளரான… Continue reading நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

நூலக நிறுவனத்தின் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் செயல்த்திட்டம்

Published on Author Noolaham Foundation

 நூலகம் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியில் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் என்ற செயற்பாடு அண்மையில் சுன்னாகம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.சோதிடம் மற்றும் மருத்துவம் சம்பந்தமான குறிப்பிட்ட தொகைச் சுவடிகள் முதற்கட்டமாக மின்வடிவத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறு 1385 சுவடிகளும் 75 வரையான பண்டைக்கால நாணயங்களும் மின்னூல் வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டன. ஓலைச்சுவடிகள் ஆவணமாக்கல் தொடர்பான பயிற்சி ஒன்றினை அண்மையில் பாண்டிச்சேரியில் நிறைவு செய்து கொண்டு திரும்பிய நூலக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சிவானந்தமூர்த்தி சேரனுடன் நூலகம் ஓலைச்சுவடிகள் ஆவணப்படுத்தலுக்குப் பொறுப்பான முனைவர்    … Continue reading நூலக நிறுவனத்தின் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் செயல்த்திட்டம்

“பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

Published on Author Noolaham Foundation

நூலகத்தின் ஏற்பாட்டில் “பனையோலை – ஆவணப்படுத்தல் செயலமர்வு” 09.09.2012அன்று யாழ்ப்பாணம், ‘தொடர்பகம்’ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு நூலகம் நிறுவனத்தின் யாழ் இணைப்பாளர் திரு கே. கௌதமன் தலைமை வகித்தார். “இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தலின் அவசியம்” என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு. குருபரன், “இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தல் சார்ந்து இன்றைய எமது நிலை” என்ற தலைப்பில் முனைவர் ஜெ. அரங்கராஜ், “சர்வதேச நியமங்களினுடனான உலக நாடுகளின் ஆவணப்படுத்தல்” என்ற தலைப்பில்… Continue reading “பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு