நூலகத்தில் திருமறைக் கலாமன்ற வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் அரங்கவியல் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்துள்ள “திருமறைக்கலாமன்றத்தின்” வெளியீடுகளை இப்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிட முடியும். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/nrdegj9 கலைமுகம் இதழ்கள்: http://tinyurl.com/Kalaimugam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

நூலகத்தில் ஜீவநதி மாத இதழ்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழான ‘ஜீவநதி’ இதழ்கள் நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு பகிரப்படுகின்றன. ஜீவநதி இதழின் ஆசிரியர் திரு. க. பரணிதரன் அவர்கள் இதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளதுடன் ஜீவநதி இதழ்களையும் நூலக நிறுவனத்துக்கு அளித்துவருகின்றார். மேலும் ஜீவநதி வெளியீடுகள் அனைத்தையும் நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும் நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். இணைப்பில் நூல்கள்: http://tinyurl.com/p2ze6pv {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில்… Continue reading நூலகத்தில் ஜீவநதி மாத இதழ்

நூலகத்தில் வேலணையூர் தாஸ் படைப்புக்கள்

Published on Author Noolaham Foundation

யாழ் இலக்கியக் குவியத்தின் முன்னணி இலக்கியச் செயற்பாட்டாளரும் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர், இலக்கிய நிகழ்வுகளின் இணைப்பாளர் ‘வேலணையூர் தாஸ்’ அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/oyrkmm5 {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் தனது எழுத்தில் அமைந்த நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான அனுமதியினை அளித்துள்ளார். செ.சிவநாயகம் பல மீளுருவாக்கக் கூத்துக்களை எழுதியுள்ளதுடன் தொடர்ச்சியாக கூத்துச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருபவர். கூத்து மீளுருவாக்கம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து அக்கிராமத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/Sivanayagam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்-… Continue reading நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

நூல் தேட்டம் செல்வராஜா என அனைவராலும் அறியப்படும் திரு. நடராஜா செல்வராஜா நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்குப் பலகாலமாகப் பங்களித்து வருபவர். அவ்வாறான நேரடிச் செயற்பாட்டாளர்கள் என்றாலும் ஒரு நிறுவனமாக முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு எழுத்துமூல அனுமதிகளை நூலக நிறுவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் செல்வராஜா அண்மையில் நூல் தேட்டப் பணிகளுக்காக இலங்கை வந்திருந்தபோது தனது அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். ஈழத்து நூலகவியலாளரில் மிக முக்கிய இடம் வகிக்கும் செல்வராஜா ஓர் எழுத்தாளர்; ஆய்வாளர்; பதிப்பாளரும் ஆவார். நூல்… Continue reading நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு குருக்கள்மடத்தினைச் சேர்ந்த சிறுகதை, நாடகம் மற்றும் சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சமூக ஆய்வாளர் வி.கெளரிபாலன் அவர்கள், தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும், தனது நூல்களையும் நூலக நிறுவனத்திடம் கையளித்துள்ளார். இவரது நூல்களான 1) பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள், 2) வானுறையும் தெய்வத்தினுள் முதலிய நூல்கள் ஏற்கனவே நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் கெளரிபாலனது நூல்கள்- http://tinyurl.com/Gowripalan {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில்… Continue reading நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

நூலகத்தில் தினச்செய்தி வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

அண்மைக்காலமாக யாழில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ‘தினச்செய்தி’ வாரப்பத்திரிகைகளை நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கு, அதன் தலைமை ஆசிரியரும், ஏசியன் ரிபீயூன் (Asian Tribune) செய்தித்தளத்தின் தலைமை ஆசிரியருமான கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இணங்கியதுடன், தினச்செய்தியின் ஆரம்ப வெளியீடுகளை நிறுவனத்திடம் கையளித்தார். 15/10/2015 அன்று அவரது தினச்செய்தி பணிமனையில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகர் மற்றும் நூலக நிறுவனத்தின் தன்னார்வலருடனும் இடம்பெற்ற இச் சந்திப்பிலேயே கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இவ் இணக்கத்தினை தெருவித்திருந்ததுடன் அவரது எழுத்தில் வெளியான இரு நூல்களையும்… Continue reading நூலகத்தில் தினச்செய்தி வாரப் பத்திரிகை