நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம் (noolahamfoundation.org/web) அண்மையில் வெளியிடப்பட்டது. நூலக பங்காளர்கள் சுட்டிக்காட்டிய பல மேம்படுத்தல்களை இந்த புதிய வலைத்தளம் கொண்டுள்ளது.
* பன்மொழி வலைத்தளம் – வலைத்தளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ளது – multilingual website
* நடமாடும் கருவிகளுக்கு ஏற்ற வடிவமைப்பு – responsive website
* தொழில்சார் வடிவமைப்பு – professional design
* உள்ளடக்க ஒழுங்கமைப்பு – improved presentation of the content, improved navigation
இந்த வலைத்தளம் டூர்ப்பல் (drupal.org) என்ற பரவலாக தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் கட்டற்ற உள்ளடக்க மேலாண்மை மென்பொருள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. zircon (https://github.com/noolahamfoundation/nf-zircon) என்ற வடிவ வார்ப்புருவைப் பயன்படுத்துகிறது.
இந்த வலைத்தளத்தை ஏவ பங்களித்த கஜானி, வாகிசன், மதி, சஞ்ஜே கார்த்திக், சீனிவாசன், கோபி, உமாதரன், சேரன், ரமணேஸ், ரவி, நற்கீரன் ஆகியோருக்கு எமது நன்றிகள்.
இந்த வலைத்தளம் மேலும் மேம்பட உங்கள் பங்களிப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. மொழிபெயர்ப்பு, வடிவமைப்பு, பரிசோதனை, பராமரிப்பு என்று பல வழிகளில் நீங்கள் பங்களிக்க முடியும்.