உத்தமம் 16 வது தமிழ் இணைய மாநாடு ரொறன்ரோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 – 27 திகதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் எண்ணிம நூலகங்கள், ஆவணங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றோடு தொடர்புடைய சீர்தரங்கள் தொழிநுட்பங்களை ஆயவும் அறிவுப் பகிர்வு செய்வதற்கான ஒரு களத்தை அமைத்தல் தொடர்பாக உரையாடப்பட்டது.
அந்த மாநாட்டில் நூலக நிறுவனம் சார்பாக நற்கீரன் அவர்கள் “தமிழ்ச் சூழலில் திறந்த இணைப்புத் தரவுக்கான மெய்ப்பொருளிய உருவாக்கம் நோக்கி” என்ற ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார், நிகழ்த்தலையும் வழங்கினார்.
தொடர்புடைய இணைப்புகள்
* ஆய்வுக் கட்டுரை – https://docs.google.com/document/d/11sY8PxLkhtEenHfL4GP97rcYxYtnoxMmmFyKHQ3iFvI/edit?usp=sharing
* நிகழ்த்தல் – aavanaham.org/islandora/object/noolaham:13137
* தமிழ் இணைய மாநாட்டு இணைப்பு – tamilinternetconference.infitt.org/selected-papers