வாய்மொழி வரலாறு என்பது வாய்மொழியின் ஊடாக, நினைவுகள் ஊடாக நபர்கள், சமூகங்கள், நிகழ்வுகள், விடயங்கள் பற்றி வரலாற்றுத் தகவல்கள்களைத் திரட்டுதல், பாதுகாத்தல், பகிர்தல், விளங்க்கிக்கொள்தல் முறையையும், அது தொடர்பான கற்கையையும், அந்தச் சேகரிப்புக்களையும் குறிக்கிறது.[1] வாய்மொழி வரலாறு எழுத்தாவணங்களைத் தாண்டி தகவலைப் பெற, பதிவுசெய்ய முனைகிறது
நாட்டாரியல் மிகச்சுவாரசியமானது. மனிதனின் உளவியலையும், சமூகக்கூட்டு மனத்தையும் ஆராய அதைவிட மிகச்சிறந்த துறை வேறெதுவும் இல்லை. அதிலும் மனிதசக்தியை மீறியதாக மக்கள் நம்பும் நாட்டார் வழிபாடுகள் பற்றிய கற்கைகள், மானுடவியலில் மிகக்குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுக்கொள்கிறது. அந்த வகையில், மலையகப்பகுதியில் நிலவும் நாட்டாரியலும் பல தனித்துவங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. அவற்றில் காட்டேரி எனும் பெண்தெய்வ வழிபாடு சிறப்பிடம் பெறுகின்றது.
லிந்துலை சென்ரெகுலர்ஸ் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த நல்லு பெரியசாமி அவர்களின் வாய்மொழி வரலாற்றில் தான் முன்னின்று நடாத்தி வரும் காட்டேரி அம்மன் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். சிறுவயதில் தான் தந்தையுடன் நிற்கும் போது, தன்னைத் “தலைக்கருத்தனாக” அம்மன் தேர்ந்தெடுத்ததாகவும், இந்தியாவில் இருந்து கூட “உக்கிரமான இந்த அம்மனை எப்படி இங்கு சாதாரணமாக வழிபடுகிறீர்கள்” என்று கேட்பதாகவும், தான் இந்தியாவுக்குப் போயிருக்கலாம்; ஆனால் நான் போனால் இங்கு ‘ஈஸ்பரி’யை யார் வழிபடுவது என்று தான் இந்தியா போகாமல் இங்கேயே தங்கிவிட்டதாகவும் சொல்கிறார் இவர்.
தனித்துவமான காட்டேரி வழிபாடு பற்றிய இவரது அனுபவங்கள் நாட்டாரியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயனுள்ளவை.
வாய்மொழி வரலாறு பகுதி 01
வாய்மொழி வரலாறு பகுதி 02