உலக எண்ணிமப் பாதுகாப்பு தினமானது, வருடாந்தம் நவம்பர் மாத இறுதி வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படும் தினம். இவ்வாண்டு 29ஆம் திகதி வியாழக்கிழமை (இன்று) உலகளாவிய ரீதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
எண்ணிமப் பாதுகாப்பு (digital preservation) என்பது, வணிகம், கொள்கை வகுப்பு, தனிப்பட்ட ஒழுகலாறுகள் என்பவை உட்பட சமூகத்தின் அனைத்து அம்சங்களோடும் இரண்டறக் கலந்தது. சமகாலக் கணினி யுகத்தை வரையறுக்கும் எண்ணிமத் தொழிநுட்பங்கள், பரலவான, எங்கும் வியாபித்திருக்கின்ற. தொடர்ச்சியாக மாற்றமடைகின்ற அம்சங்களாக அமைந்திருக்கின்றன. மருத்துவம், விஞ்ஞானம், சட்டம், போன்ற அத்தியாவசியத் துறைகளில் மாத்திரமன்றி, ஆய்வுகள், கைத்தொழில், அரசியல் முதலிய சகல துறைகளிலும் எண்ணிம சாதனங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. பண்பாட்டு மரபுரிமையும், ஏன் ஊடகங்களும் கூட எண்ணிமச் சாதனங்களிலேயே தங்கியிருக்கின்றன. இத்தகைய ஒரு பின்னணியில், எண்ணிமப் பாதுகாப்பு எத்தனை முக்கியமானது என்பதை விரிவாகச் சொல்லத்தேவையில்லை.
இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும், எண்ணிமப் பாதுகாப்புக் கூட்டணியானது (Digital Preservation Coalition, சுருக்கமாக DPC) எண்ணிமப் பாதுகாப்பு தொடர்பான அறிவை உலகெங்கும் எடுத்துச் செல்கிறது. எண்ணிமப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அவ்வமைப்பு செய்து வரும் முன்னெடுப்புகளில், எண்ணிமப் பாதுகாப்பு ஆர்வலர்களாக நாமும் கலந்துகொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு: அவர்களது வலைத்தளம்.