நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணகத் தளம் கட்டற்ற மென்பொருளான ஐலண்டோரா 7 இல் இயங்குகிறது. ஐலண்டோராவின் அடுத்த தலைமுறை வெளியீடே ஐலன்டோரா 8 ஆகும். இது புதிய கட்டமைப்புக்களையும் (architecture) கூறுகளையும் (features) கொண்ட ஒரு பாரிய முன்னெடுப்பு. குறிப்பாக இணைப்புத் தரவுவினை (Linked Data) உருவாக்கும் (create), வெளியிடும் (publish) வசதியுடன் இது வெளிவருகிறது. இது தொடர்பான அறிவிப்பினை இங்கு காணலாம்.
ஐலன்டோராவின் இடைமுகம் அல்லது முகப்பு முனை (front end) டுரூப்பல் 8 ஆல் ஆனது. டுரூப்பல் சிறந்த பன்மொழி வசதிகளைக் கொண்டது. டுரூப்பலில் இடப்படும் தரவுகள் ஃபெடோரா களஞ்சியத்தில் பாதுகாக்கப்படுகிறன. இத் தரவுகள் ஃபிளேச்கிறாப் (blazegraph) எனப்படும் மும்மைத்தரவுத்தளத்தில் (triplestore) தேடல் வசதிக்காட index செய்யப்படுகிறது. இரண்டு தளங்களிலும் சரியான மொழிக் குறிசொற்களோடு (language tags) பன்மொழித் தரவுகள் இடப்படுகின்றன. இதனால் நாம் தமிழில் இணைப்புத் தரவினை உருவாக்க, வெளியிட முடியும். இது தொடர்பான விளக்கத்தை இங்கு காணலாம்.
எண்ணிமக் களஞ்சியங்கள் (digital repositories), காட்சிப்படுத்தல் தளங்கள் (discovery systems) பன்மொழியில் இயங்குவது அவசியம் ஆகும். அதற்கு ஐலண்டோரா 8 சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த வசதியைக் தற்போது கொண்டு இருக்கும் ஒரே ஒரு களஞ்சியச் சட்டகமாக (digital repository framework) ஐலண்டோரா 8 விளங்குகிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் செயற்படும் நினைவு நிறுவனங்கள் ஐலண்டோரா 8 வினை தங்கள் எண்ணிம களஞ்சியத் தேவைகளுக்கு பயன்படுத்த பரிசீலிக்கலாம். அவ்வாறு பயன்படுத்தப்படும் போது, அதனை உருவாக்கும் பயன்படுத்தும் சமூகத்துடன் (community) உடன் இணைந்து செயற்பட வேண்டும்.
நூலக நிறுவனம் அடுத்த ஆண்டு ஐலண்டோரா 8 இக்கு தனது தளங்களை நகர்த்த திட்டமிட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பங்களில் இயங்க, நூலகச் செயற்திட்டங்களுக்குப் பங்களிக்க உங்களுக்கு ஆர்வம் இருப்பின் எம்மோடு இணையுங்கள் (noolahamfoundation@gmail.com).