Job Title – பணித் தலைப்பு | கள ஆய்வாளர் / Field Researcher (02 பணியாளர்கள் |
Reports To – அறிக்கையிடல் | தலைமை செயற்பாட்டு அலுவலகர் / Chief Operating Officer |
Instructions From – நெறிமுறைகள் பெறுப்படுதல் | தலைமை செயற்பாட்டு அலுவலகர் / Chief Operating Officer |
Pay Band / ஊதியம் | 25,000 – 35,000 (தகுதிக்கு ஏற்ப) |
Base Location – பணி இடம் | மன்னார் (முதன்மை); புத்தளம், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு சென்று தங்கியிருந்து பணியாற்ற வேண்டி இருக்கும். |
Type – பணி வகை | முழு நேரம், மாத சம்பளம் |
Period of Assignment – பணிக் காலம் | ஓர் ஆண்டு, நிரந்தமாக நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. 4 மாதங்கள் தகுதிகாண் காலம். |
Date of Duty Assignment – தொடக்க திகதி | உடனடியாக |
நூலக நிறுவனம்
நூலக நிறுவனமானது (noolahamfoundation.org) இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.
2005 முதல் இலங்கையின் முதன்மையான தமிழ் எண்ணிம ஆவணக் காப்பகமாகத் திகழும் நூலக நிறுவனம் இதுவரை பல்வேறு செயற்றிட்டங்களூடாக 82,000க்கும் அதிகமான ஆவணங்களை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்துள்ளது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஏட்டுச் சுவடிகள், அழைப்பிதழ்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒலிப்பதிவுகள், நிகழ்படங்கள், வாய்மொழி வரலாறுகள் போன்ற சகலவிதமான ஆவணங்களையும் நூலக நிறுவனம் பதிவுசெய்து வருகிறது. அவ்வகையில் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான முதன்மையான உசாத்துணைத் திரட்டினை நூலக நிறுவனம் உருவாக்கியுள்ளது.
வாய்ப்பு
இந்தப் பணி தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத்தளங்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தி, பாதுகாத்து மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளார்ந்து ஆர்வம் கொண்ட ஒருவருக்கானது. நூலக நிறுவனம் களப் பணி (field work) சார்ந்த ஆவணப்படுத்தல் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, ஏட்டுச்சுவடிகள், அரிய ஆவணங்களைத் தேடிப் பதிவுசெய்யும் செயற்றிட்டமொன்றினை பிரித்தானிய நூலகத்தின் அனுசரணையுடன் நூலக நிறுவனம் தொடங்கியுள்ளது. களப் பணி சார்ந்த செயற்திட்டங்களை ஒருங்கிணைக்கும் செயற்படுத்தும் பணிகளில் நீங்கள் ஈடுபடுவீர்கள். சமூக அறிவியல் துறைகள், கலைத் துறைகள், ஊடகத் துறைகளைச் சார்ந்தவர்கள் தமது ஆய்வுத் திறனை, களப் பணி கல்வியை, அனுபவத்தினை இந்தப் பணியில் பயன்படுத்தி விரிவாக்கிக் கொள்ள நல்ல வாய்ப்பு.
கடமைகள்
- களப் பணி திட்டமிடல், ஒருங்கிணைப்பு, செயற்படுத்தல் – Field work planning, coordination, execution
- அரிய ஆவணங்களை ஆய்வு, களப் பணி ஊடாக அடையாளம் காணுதல், சேகரித்தல், எண்ணிம ஆவணப்படுத்தல்
- ஆய்வுத் தகவல்கள் சேகரிப்பு
- வாய்மொழி வரலாறுகள் பதிவுசெய்தல்
- ஆவணப் பட்டியலாக்கம்
- செயற்றிட்ட மற்றும் நிறுவன அறிக்கையிடல் – Reporting
தேவைப்படும் தகுதிகள்
- அறிவு வளங்களை, மரபுரிமைச் சொத்துக்களை ஆவணப்படுத்தல், பாதுகாப்பு, அணுக்கப்படுத்தல் பணிகளில் ஈடுபாடு.
- பல செயற்திட்டங்கள் ஆய்வுச் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆய்வுச் செயற்பாடுகள், ஆய்வுக் கட்டுரையாக்கம் போன்றவற்றில் அனுபவம் அல்லது ஆர்வம் இருப்பது அவசியமானது. ஏதாவது ஒரு பல்கலைக்கழகப் பட்டம் இருப்பது விரும்பத்தக்கது.
- அணியாகச் செயற்படும் (team work) அணுகுமுறை தேவை. தன்னார்வலர்களை, ஊழியர்களை, ஆர்வலர்களை சகாக்களாக (peers) மதித்துச் செயற்படவேண்டும்.
- களப் பணிக்காகப் பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்ய விருப்பம் இருக்க வேண்டும். உந்துருளிச் சாரதி அனுமதிப்பத்திரமும் உந்துருளியும் வைத்திருக்க வேண்டும்.
- பல செயற்திட்டங்கள் கள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டவை. கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டி இருக்கும். மன்னார், வன்னிப் பகுதிகளுக்கு சிறிதளவு பயணிக்க வேண்டி இருக்கலாம். பயிற்சிக்காக நாட்டின் ஏனைய பகுதிகளுக்குப் பயணிக்க வேண்டி இருக்கலாம். (தூரப் பயணங்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும்.)
- சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு பலருடன் அறிமுகம் செய்து தயங்காமல் உரையாடித் தொடர்புகளைப் பெற்றுக் கொள்ளும் தொடர்பாடல் திறமை அவசியமானது.
- தமிழில் நன்கு எழுதும் திறமை (எ.கா அறிக்கைகள், கட்டுரைகள்)
- பல்வேறு வேலைநேரங்களில் வேலை செய்ய வேண்டி ஏற்படலாம். சில சந்திப்புக்களுக்கான நேரங்கள் வார இறுதி நாட்களிலேயே கிடைக்கலாம். செயற்றிட்டம் சார்ந்த ஸ்கைப், தொலைபேசி உரையாடல்கள் வெவ்வேறு நேரங்களில் செய்ய வேண்டியிருக்கும்.
- அடிப்படைக் கணினி அறிவு அவசியம் ஆகும்: எ.கா தட்டச்சு (typing), மின்னஞ்சல் (email), ஸ்கைப் (skype), கூகிள் ஆவணம் (drive.google.com)
விரும்பப்படும் தகுதிகள்
- DSLR புகைப்படக்கருவிகளைப் பயன்படுத்திய அனுபவம் மிகவும் விரும்பத்தக்கது.
- நூலகவியல், ஆவணகவியல், அருங்காட்சியகவியல், பண்பாட்டு மரபுரிமைகள் போன்ற துறைகளில்/விடயங்களில் பரிச்சியம்
- ஆய்வு முறைமைகள் (research methods) தொடர்பான கல்வியறிவு, ஆய்வினை மேற்கொண்ட அனுபவம் விரும்பத்தக்கது.
- செயற்திட்ட மேலாண்மை அறிவு, அனுபவம்
- அடிப்படை ஆங்கில அறிவு (எ.கா வாசிக்க)
- ஊடகவியல், சமூக ஊடகங்கள் அனுபவம்
- காணொளிகள், ஒலிக்கோப்புக்களை தொகுத்தல் அனுபவம்
- இலாப நோக்கமற்ற நிறுவனங்கள், தன்னார்வச் செயற்பாட்டு அனுபவம்
பல்வகைத்தன்மை
நூலக நிறுவனம் தனது சேகரிப்புக்களில், கொள்கைகளில், செயற்திட்டங்களில், கட்டமைப்பில் சமூகத்தின் பல்வகைத்தன்மையை (diversity) காத்திரமாக உள்வாங்கி வளர வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளது. நூலக நிறுவனம் பால்நிலை (gender), பாலியல் நோக்குநிலை (sexual orientation), சாதி (caste), வயது (age), சமயம் (religion), பிரதேசம் (region) உட்பட்ட எந்த வகைகளிலும் பாகுபாடுகள் காட்டுவதில்லை.
விண்ணப்ப தேவைகள், முறைகள்
சுயவிபரம் (resume), அறிமுகக் கடிதம் (cover letter), மற்றும் உங்களைப் பற்றி கூறக் கூடிய மூன்று நபர்களின் தொடர்புகள் (contact information of three references) ஆகியன அவசியம் ஆகும். நீங்கள் நூலக நிறுவனத்தின் மனித வள உப குழுவால் அல்லது நியமிக்கப்பட்ட வேறு ஒரு குழுவால் நேர்காணல் செய்யப்படுவீர்கள்.
ஆர்வமுள்ளோர் எதிர்வரும் ஜுலை 23, 2020 அன்றோ அதற்கு முன்பதாகவோ மேற்சுட்டப்பட்ட விடயங்களைnoolahamfoundation@gmail.com என்ற முகவரிக்கு Attention COO – Application for Field Researcher என்ற விடயத்தலைப்பு (subject line) உடன் அனுப்பி வைக்கவும்.