நூலக நிறுவனத்தினால் கடந்த பதினொரு வருடங்களாக உலகளாவியரீதியில் மேற்கொள்ளப்படும் இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் சார்ந்த ஆவணங்களை எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் செயற்பாடுகளுக்கு உலகம் பூராகவும் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் தொடர்ச்சியாக பலவழிகளில் பங்களிப்பு செய்துவருகின்றனர்.
அந்தவகையில் கடந்த சில மாதங்களில் நூலக நிறுவனத்தினோடு பல புதிய தன்னார்வலர்களும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் இணைந்து கொண்டு, இலங்கை தமிழ்பேசும் சமூகம் தொடர்பான எண்ணிம ஆவணப்படுத்தலுக்கு பிரஞ்ஞை பூர்வமான தமது பங்களிப்பினை பலவழிகளிலும் செய்து வருகின்றனர்.
மேலதிக தன்னார்வலர்களின் விபரங்கள்-
http://noolahamfoundation.org/wiki/index.php?title=Volunteers
அவர்களில் சிலரின் புகைப்படங்கள்-
{{{நீங்களும் நூலக நிறுவனத்துடன் தன்னார்வலராக இணைந்து, இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணங்களை எண்ணிம ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் முதலிய எமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளுக்கு உங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்ய தொடர்புகொள்ளுங்கள்
இலங்கை – +94 112 363 261/ +94 212 231 292
ஐக்கிய இராச்சியம் (UK)- +44 791 555 5458
கனடா – +14 168 546 768
நோர்வே – +47 400 557 20
அவுஸ்திரேலியா – +61 443 618 708
அமெரிக்கா – 1 323 679 4666}}}