நூலகத்தில் நினைவு மலர்கள்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் கடந்த பதினொரு ஆண்டுகளில் இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் தொடர்பான எண்ணிம ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாக 300க்கும் மேற்பட்ட நினைவு மலர்களை (கல்வெட்டுக்கள்) ஆவணப்படுத்தி http://tinyurl.com/nt5bqcf மூலம் பகிர்ந்துள்ளது.

பொதுவாக நூலகங்களிலோ ஆவணகங்களிலோ நினைவு மலர்கள், அந்தியட்டி, திவச கல்வெட்டுக்கள் ஆவணப்படுத்துதல் அரிதாக உள்ளது. எமது சமூக, சமய, பண்பாட்டு, பிரதேச வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த வெளியீடுகளின் முக்கியத்துவம் போதிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை.

இச் சூழலில் நூலக நிறுவனம் இவற்றின் முக்கியத்துவம் கருதிப் போதிய கவனமெடுத்து ஆவணப்படுத்தி வருகிறது. அவற்றை இணையம் மூலம் எங்கிருந்தும் எக்காலத்திலும் பார்வையிட முடியும். நீங்களும் உங்கள் உறவுகளின் நினைவு மலர்களை நூலக நிறுவனத்துக்கு ஆவணப்படுத்த வழங்குவதனூடாக எமது சமூகத்தின் நுண்வரலாறெழுதுதலுக்கும் பங்களிக்க வேண்டுகிறோம்.

நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் குறிச்சொற்கள் பகுதியிலுள்ள வாழ்க்கை வரலாறு (920) எனும் பகுப்பில் “நினைவு மலர்” எனும் உப பகுப்பின் ஊடாக இவ் நினைவு மலர்கள் அனைத்தையும் பெயர்களின் அகரவரிசை ஒழுங்கில் பார்வையிடமுடியும்.

Blog 2

Blog 3

Blog 4

Blog1

Blog3

Blog5

Blog6

{{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது உறவினர்களுடைய நினைவுமலர்களையும் நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்குத் தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292, noolahamfoundation@gmail.com}}