பதினைந்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள வலம்புரிப் பத்திரிகையானது 1999ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இற்றை வரை சிறப்பான செய்திப்பதிவுகளை மேற்கொண்டுவரும் ஓர் தினசரி செய்திப் பத்திரிகை ஆகும்.
மேலும் இலங்கையின் வடபகுதி ஊடகங்களில் பதினைந்து ஆண்டுகால சிறப்பான செய்திப்பதிவுகள் அடங்கிய வரலாற்றுப் பின்புலத்தினை கொண்ட இப்பத்திரிகையானது தனது ஆரம்பகால வெளியீடுகள் உட்பட அனைத்து வெளியீடுகளையும் இலங்கை தமிழ் பேசும் சமூகத்தின் எண்ணிம ஆவணக்காப்பகமான நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தி உலகலாவிய ரீதியில் திறந்த அணுக்கத்தில் பகிரவுள்ளது.
நூலக நிறுவன ஆவணக்காப்பகத்தில் உலகின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் தமிழ் பேசும் சமூகங்களின் ஊடாக வெளிவரும் 2135 பத்திரிகை இதழ்கள் (33 தலைப்புகள்) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் சரிநிகர், வைகறை, தினமுரசு முதலியனவும் எண்ணிம ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் வெளியில் இன்று வலம்புரிப் பத்திரிகையும் ஆவணப்படுத்தப்பட உள்ளது. இச் செயற்பாட்டுக்கான அனுமதியினை வலம்புரி பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ந.விஜயசுந்தரம் 19/10/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகரிடம் வலம்புரி அலுவலகத்தில் வைத்துக் கையளித்தார்.
{{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது உறவினர்களுடைய நினைவுமலர்களையும் நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்குத் தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292, noolahamfoundation@gmail.com}}