இசைநாடகப்பள்ளி; மட்டக்களப்பின் குருக்கள் மடத்தில் இருந்து கீதா கெளரிபாலன் என்பவரால் கடந்த இருஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இசை மற்றும் நாடகம் முதலியவற்றினை தொடர்ச்சியாக பேணும் நோக்குடனும் புதியதோர் தலைமுறையினை இதன்பால் வளர்த்தெடுக்கும் நோக்குடனும் தொடர்ந்து இயங்கிவருகின்றது.
இவ் இசைநாடகப் பள்ளியின் வெளியீடாக ‘வியளம்’ எனும் சஞ்சிகை சிறுவர்கள், இளையோர்கள் போன்றோரின் ஆற்றலுக்கு களமமைக்கும் விதமாக அண்மைக்காலமாக வெளியிடப்படுகின்றது. இச் சஞ்சிகைகள் நூலக நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. இவற்றின் பிரதிகள் மற்றும் அனுமதிகள் போன்றவற்றினை ‘இசைநாடகப் பள்ளியின்’ நிறுவனரும், வியளம் சஞ்சிகை ஆசிரியருமான கீதா கெளரிபாலன் நூலக நிறுவனத்திடம் கையளித்தார். இதுபோல தொடர்ச்சியாக அச்சஞ்சிகைகள் நூலகத்துக்கு அனுப்பிவைப்பதற்கும் இணக்கம் தெருவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பில் வியளம் இதழ்கள்- http://tinyurl.com/z4rtdxa
{{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது உறவினர்களுடைய நினைவுமலர்களையும் நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்குத் தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292, noolahamfoundation@gmail.com}}