நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் தனது எழுத்தில் அமைந்த நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான அனுமதியினை அளித்துள்ளார். செ.சிவநாயகம் பல மீளுருவாக்கக் கூத்துக்களை எழுதியுள்ளதுடன் தொடர்ச்சியாக கூத்துச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருபவர். கூத்து மீளுருவாக்கம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து அக்கிராமத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/Sivanayagam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்-… Continue reading நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

நூல் தேட்டம் செல்வராஜா என அனைவராலும் அறியப்படும் திரு. நடராஜா செல்வராஜா நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்குப் பலகாலமாகப் பங்களித்து வருபவர். அவ்வாறான நேரடிச் செயற்பாட்டாளர்கள் என்றாலும் ஒரு நிறுவனமாக முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு எழுத்துமூல அனுமதிகளை நூலக நிறுவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் செல்வராஜா அண்மையில் நூல் தேட்டப் பணிகளுக்காக இலங்கை வந்திருந்தபோது தனது அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். ஈழத்து நூலகவியலாளரில் மிக முக்கிய இடம் வகிக்கும் செல்வராஜா ஓர் எழுத்தாளர்; ஆய்வாளர்; பதிப்பாளரும் ஆவார். நூல்… Continue reading நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்