நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு குருக்கள்மடத்தினைச் சேர்ந்த சிறுகதை, நாடகம் மற்றும் சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சமூக ஆய்வாளர் வி.கெளரிபாலன் அவர்கள், தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும், தனது நூல்களையும் நூலக நிறுவனத்திடம் கையளித்துள்ளார். இவரது நூல்களான 1) பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள், 2) வானுறையும் தெய்வத்தினுள் முதலிய நூல்கள் ஏற்கனவே நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் கெளரிபாலனது நூல்கள்- http://tinyurl.com/Gowripalan {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில்… Continue reading நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

நூலகத்தில் தினச்செய்தி வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

அண்மைக்காலமாக யாழில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ‘தினச்செய்தி’ வாரப்பத்திரிகைகளை நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கு, அதன் தலைமை ஆசிரியரும், ஏசியன் ரிபீயூன் (Asian Tribune) செய்தித்தளத்தின் தலைமை ஆசிரியருமான கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இணங்கியதுடன், தினச்செய்தியின் ஆரம்ப வெளியீடுகளை நிறுவனத்திடம் கையளித்தார். 15/10/2015 அன்று அவரது தினச்செய்தி பணிமனையில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகர் மற்றும் நூலக நிறுவனத்தின் தன்னார்வலருடனும் இடம்பெற்ற இச் சந்திப்பிலேயே கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இவ் இணக்கத்தினை தெருவித்திருந்ததுடன் அவரது எழுத்தில் வெளியான இரு நூல்களையும்… Continue reading நூலகத்தில் தினச்செய்தி வாரப் பத்திரிகை

‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்(2004), மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்னாள் கலாசார உத்தியோகத்தரும், சமூக ஆய்வாளருமான ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள்; நூலக நிறுவனத்தில் தனது நூல்களை எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்குரிய அனுமதியை அளித்துள்ளார். இவரது நூல்களான, 1) சுவாமி விபுலானந்தரின் தொல்லியலாய்வுகள் 2) குளக்கோட்டன் தரிசனம் 3) கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள் போன்ற பல நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் அணுகிப் பயன்பெறமுடியும். கீழுள்ள இணைப்பில் அந் நூல்களையும் அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பார்வையிடலாம். 1)… Continue reading ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி பகிர்வதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளார். மேலும் நூலக நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் அங்கத்துவம் வகித்துவரும் இவர்; நூலக நிறுவனத்தால் 2013ல் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு மாநாட்டில் முக்கிய ஆலோசகராகவும், வளவாளராகவும் ஈழத்தமிழ் ஆவணப்படுத்தலுக்கு முக்கிய பங்காற்றியுமுள்ளார். அவரது நூல்களில் 1) இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் 2) ஈழத்து நவீன இலக்கியம் 3) ஈழத்து நவீன கவிதை 4)… Continue reading பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு உதவி

Published on Author Noolaham Foundation

வடமாகாண சூழலியல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் திரு. பொன்னுத்துரை ஐங்கரநேசன், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக வலுச்சேர்க்கும் வகையில் சில உபகரணங்களை அவரது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்திடம் 23/09/2015 அன்று கையளித்தார். மேலும் அவர் எழுதிய நூல்களையும், 1993 இல் இருந்து 2012 வரையான காலப்பகுதியில் வெளியாகிய அவரது “நங்கூரம்” சஞ்சிகைகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினையும் 2015/05/22 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நூலக… Continue reading வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு உதவி

பேரா. மா.சின்னத்தம்பி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் “மா.சின்னத்தம்பி” அவர்கள் தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். அவரது நூல்கள்- 1) அரச நீதி, 2) ஆசிரிய முகாமைத்துவம், 3) இலங்கையில் முகாமைத்துவக்கல்வி, 4) கல்வித்திட்டமிடல் கோட்பாடுகளும் புதிய வளர்ச்சியும், 5) இலங்கையின் கல்விச் செலவு முதலிய பல நூல்களும் நூலக நிறுவனத்தில் காணப்படுகின்றன. மேலதிக நூல்களுக்கு கீழ் உள்ள இணைப்பை பார்வையிடவும்: http://tinyurl.com/p75rxkl {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும்… Continue reading பேரா. மா.சின்னத்தம்பி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்