நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்
நூலக நிறுவனமும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. அருகிவரும் தொழிற்கலைகளை பல்லூடகங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். புகைப்படங்கள், காணொளிகள், வாய்மொழி வரலாறுகள் என்பன பெறப்பட்டு, அவை நூலகத்தின் ஆவணகம் வலைத்தளத்தில் தனிச்சேகரங்கள் திறக்கப்பட்டு அங்கு சேகரிக்கப்படுகின்றன. இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்கலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தும்புக்கைத்தொழிலானது, கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி கிராமத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டது. தென்னம்மட்டையை பெற்றுக்கொள்ளல்,… Continue reading நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்