கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு அவர்களின் நூலக வருகை
2025, மே மாதம் 05 ஆம் திகதி யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு அவர்கள் வருகை தந்திருந்தார். நூலக வலைத்தளத்தையும், அதன் செயல்பாடுகளைப் பற்றிய அடிப்படை அறிவைய ஏற்கனவே பெற்றிருந்த இவர், நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள், ஆவணப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக அடிப்படையிலான ஆவணப்படுத்தல் முயற்சிகளை நேரடியாக அறிந்துகொள்வதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அரிய ஆவணங்களை பார்வையிட்டதுடன், ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாக கூடுதல்… Continue reading கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு அவர்களின் நூலக வருகை