பணி வெற்றிடம்
நூலக நிறுவனமானது (noolahamfoundation.org) இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படுத்தும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.
2005 முதல் இலங்கையின் முதன்மையான தமிழ் எண்ணிம ஆவணக் காப்பகமாகத் திகழும் நூலக நிறுவனம் இதுவரை பல்வேறு செயற்றிட்டங்களூடாக 100,000 இற்கும் அதிகமான ஆவணங்களை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்துள்ளது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஏட்டுச் சுவடிகள், அழைப்பிதழ்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒலிப்பதிவுகள், நிகழ்படங்கள், வாய்மொழி வரலாறுகள் போன்ற சகலவிதமான ஆவணங்களையும் நூலக நிறுவனம் பதிவுசெய்து வருகிறது. அவ்வகையில் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான முதன்மையான உசாத்துணைத் திரட்டினை நூலக நிறுவனம் உருவாக்கியுள்ளது.
நூலக நிறுவனத்தின் சேகரிப்பு மேம்பாட்டுத் திட்டம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது மக்களால் தங்கள் தகவல் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய பயன்படுத்தக்கூடிய வகையில் முக்கியமான தொகுப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
பணித்தலைப்பு – எண்ணிம நூலக அலுவலர்
பணிக்கான திட்டம் – இலங்கை முஸ்லிம் எப்ஃபமேரா தொகுப்பு
(Sri Lankan Muslim Ephemera Collection)
பணி இடம் – மட்டக்களப்பு
பணி வகை – முழு நேரம்
பணிக் காலம் – 1 ஆண்டு தேவை ஏற்படின் அதிகரிக்க முடியும்
கடைமைகளும் பொறுப்புக்களும்
- நூலக நிறுவனத்தின் எண்ணிம பாதுகாப்புத் தொடர்பான கொள்கையினை பின்பற்றுதலும் நடைமுறைப்படுத்தலும்
- எண்ணிமப்படுத்துவதற்காக கொண்டு வரப்படும் ஆவணங்களை உரிய Google Sheetகளில் பதிதல்
- பதியப்பட்ட ஆவணங்களை அவற்றிற்குரிய சரியான இடங்களில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தல்
- பதியப்பட்ட ஆவணங்களை உரிய நபர்களிடம் மின்வருடுவதற்காக கொடுத்தல்.
- மின்வருடப்பட்ட ஆவணங்களினை PDF, Tiff கோப்புக்களாக மாற்றுதல்.
- மின்வருடப்பட்ட ஆவணங்களினை சரிபார்த்தல்.
- மின்வருடப்பட்ட ஆவணங்களில் பிழைகள் இருந்தால் உடனுக்குடன் அவற்றை திருத்தி இறுதிப்படுத்தல்
- இறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களிற்கு நூலக இலக்கம் வழங்கி உரிய விரிதாள்களில் பதிதல்.
- இறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களினை Digital Preservation Officer மூலமாக Binding செய்து உரிய இடங்களில் அவற்றை வைத்தல். (நூலகத்திற்குரிய ஆவணமாக இருந்தால் அலுவலகத்தில் வைத்து பேணிப் பாதுகாத்தல், குறித்த ஒரு நபரிடம் வாங்கும் ஆவணமாக இருந்தால் அவரிடம் கையளித்தல்)
- ஆவணங்களை வழங்குபவர்களுக்கு நன்றிக் கடிதம் அனுப்புதல்.
- சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை கிழமைக்கு ஒரு முறை யாழ் அலுவலகத்திற்கு அனுப்புதல்.
- கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், மின்வருடப்பட்ட ஆவணங்கள் அனைத்திற்குமான பொறுப்பு கூறல்.
எண்ணிம நூலக அலுவலருக்கான தகுதிகள்
- க.பொ.த உயர்தரத்தில் சித்தி
- அடிப்படைக் கணனி அறிவு (MS Word, MS Excel)
- நூலக அறிவியல் டிப்ளோமா தரம் ஒன்றிலாவது சித்தி பெற்றிருத்தல்
- மின்வருடல் தொடர்பில் முன்அனுபவம்
- அடிப்படை மெற்றாடேரா (Metadata ) திறன்கள்
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளோர் தங்களது சுயவிபரக் கோவையையும் அறிமுகக் கடிதத்தினையும் noolahamfoundation@gmail.com என்ற முகவரிக்கு (Attention CEO – Application for Digital Library Officer -Sri Lankan Muslim Ephemera Collection) எதிர்வரும் மே 25, 2022 அன்றோ அதற்கு முன்பதாகவோ அனுப்பி வைக்கலாம்.